Ilayathalapathy Vijay Makkal Iyakkam Press Release (TAMIL)

இந்திய அரசு 2017-ஆம் ஆண்டிற்கான மலையாள திரைப்படத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரமாக செல்வன். ஆதிஷ் பிரவினை தேர்வு செய்தது. விருது அறிவிக்கப்பட்டவுடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த செல்வன். ஆதிஷ்   எனக்கு இந்த விருது கிடைத்ததைவிட இளையதளபதி விஜய் அவர்களை சந்திக்க வேண்டும் என்பது தான் என்னுடைய வாழ்நாள் லட்சியம் என்று பேட்டி அளித்தார். இளைய தளபதி விஜய் அவர்களின் கவனத்திற்கு இந்த விஷயம் எடுத்துச்செல்லப்பட்டது. இளையதளபதி விஜய் அவர்கள் உடனே செல்வன். ஆதிஷ் பிரவினை நேரில் அழைத்து வருமாறு கூறினார். சென்னை  வந்த ஆதிஷ்  இளைய தளபதி விஜய் அவர்களை சந்தித்தார், பின் இருவரும் நீண்ட நேரம் மலையாளத்தில் உரையாடினார்கள். மேலும் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அழகு பார்த்த இளையதளபதி விஜய் அவர்கள் செல்வன். ஆதிஷ் பிரவின் அவர்களை மேன்மேலும் பல விருதுகளை வென்று வாகழ்க்கையில் பல சாதனைகளை புரிய வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவருடன் அவரது அம்மா மற்றும் கேரளா இளைய தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*