18 ஹீரோக்களுக்கு கதை சொன்ன இயக்குனர்.

ஹர ஹர மகாதேவகி படம் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியாக காத்திருக்கும் நிலையில், தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

படத்தை பற்றி இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் பேசிய போது.

“இப்படத்தில் எந்த ஒரு கருத்தும் நான் கூறவில்லை. முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்ட படம். படத்தின் முதல் பாதி காதல் காட்சிகளையும் இரண்டாம் பாதியில் பிரேக்கப் காட்சிகளையும் கொண்டு படமாக்கப்படுள்ளது. முத்தக்காட்சி,கவர்ச்சி உடை அணிவது  ஆபாசம், நண்பர்களால்  பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாக பேசிக்கொள்வதுதான் இப்படத்தின் கதை. புதுமையான விஷயத்தை முயற்சித்துள்ளோம், விமர்சனங்களை பற்றி கவலையில்லை. படத்தின் டிரெய்லர் பார்த்து அதிலுள்ள இரட்டை வசனங்களை மிகவும் ஜாலியாக எடுத்துக் கொண்டனர். தற்போது தணிக்கைக் குழுவில் இருக்கும் பெண்களும் படத்தை பார்த்து விட்டு “ஜாலியாக இருந்தது” என்று கூறியுள்ளனர். கௌதம்கார்த்தி உட்பட 18 ஹீரோகளுக்கு இப்படத்தின் கதையை நான் கூறியுள்ளேன். அவர்கள் அனைவருக்கும் இந்த கதை பிடிக்கவில்லை என்று கூற முடியாது… ஆனால் அவர்கள் அனைவரும் வெவ்வேறு விதமான கதைகளை எதிர்பார்த்து இருந்ததால் அவர்களால் இந்த கதையில் நடிக்க முடியவில்லை” . என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*