GST-க்காக தன் சம்பளத்தை குறைத்த மதன் கார்க்கி.

இந்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையினால் நாடெங்கும் பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையில், திரைத்துறையினருக்கு விதிக்கப்பட்ட கேளிக்கை வரி சினிமா உலகினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. கேளிக்கை வரியின் விகிதம் அதிகமாக இருப்பதை கண்டித்து இயக்குனர் சங்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் கண்டனத்தை தெரிவித்திருந்தார். ஜி.எஸ்.டிக்கு எதிராக ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வரும் டி.ஆர், நாளை காலை 10.30 மணிக்கு பிலிம்.சேம்பர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளார்.

தியேட்டர் உரிமையாளர்களும் இன்று முதல் காட்சிகளை ரத்து செய்து போரட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் சினிமாவை நேசிக்கும் கவிஞர் மதன் கார்க்கி அவர்கள், திரைத்துறையினருக்கும், அதை சார்ந்த மற்ற தொழிலாளர்களுக்கும் பயன் பெறும் வகையில் தன் சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மதன் கார்க்கி. ஜி.எஸ்.டி வரி மீதான மறுபரிசீலனை வந்து மாற்றம் வரும் வரை தன் சம்பளத்தில் 15% குறைத்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார். தான் எழுதும் பாடல்களுக்கும், வசனங்களுக்கும் பெறும் சம்பளத்தின் அளவை குறைத்து கொள்வதாகவும் அவர் அதில் அறிவித்துள்ளார். திரைத்துறையினருக்கு உதவும் வகையில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் மதன் கார்க்கி.

மேலும் நடிகர் மற்றும் தயாரிப்பு சங்கத் தலைவரான, நடிகர் விஷால், இன்று கேளிக்கை வரி குறித்து தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து பேச உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*