Girish Karnad Biography

Girish Karnad Biography

Girish Karnad Biography

திரைப்பட நடிகர், இயக்குநர், கன்னட எழுத்தாளர், நாடக ஆசிரியர், ரோட்ஸ் அறிஞர் என பல்வேறு துறைகளில் வலம் வந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட் அவர்கள். நான்கு சகாப்த்தங்களாக இவர் நாடகங்களை தொகுத்து வழங்கி வருகிறார். இவரின் நாடகங்கள் இவர் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த முதல் முறையே இவருக்கு பாராட்டை தேடி தந்தது. பலதரப்பட்ட தென்னிந்திய இயக்குநர்கள் இவர் இயக்கிய நாடகங்களை படமாக இயக்கியுள்ளனர். இவர் இந்திய சினிமா துறையில் நடிகராக, இயக்குநராக, திரை எழுத்தாளராக பயணித்தவர். ஹிந்தி, கன்னடம் படங்களில் பல விருதுகளை பெற்றுள்ளார். இந்திய அரசாங்கம் இவருக்கு நான்கு பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கியது. அதில் மூன்று விருதுகள் இயக்குனராகவும் நான்காவது விருதை திரை எழுத்தாளராகவும் பெற்றுள்ளார்.

ஆரம்பத்தில் இவர் சென்னை ஆக்ஸ்வேர்டு யூனிவர்சிட்டி பிரஸில் 7ஆண்டுகள் முழுநேர எழுத்தாளராக பணிபுரிந்தார். பின்னரே இவர் மெட்ராஸ் ப்ளேயர்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார். 1975ல் இந்தியாவின் சினிமா மற்றும் தொலைகாட்சி நிறுவனத்தை நிறுவியவர்.

கன்னட நாடகங்களை எழுத ஆரம்பித்த இவர், அதை ஆங்கிலத்திலும் மற்ற இந்திய மொழிகளிலும் மாற்றியமைத்து மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார்.

சமஸ்கராவே இவரின் முதல் படம், இந்த படமே இவரை திரை எழுத்தாளராக அறிமுகபடுத்தியது. அதற்கு பின் 1986ல் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். இவர் இயக்கிய முதல் கன்னட படம் வம்சி விரிக்ஷா. முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டிச் சென்றவர். அதன்பின் நிறைய படங்களில் நடிகராக, எழுத்தாளராக, இயக்குனராக வலம் வந்தார்.

இலக்கியத்திற்காக மட்டுமே . இவர் சங்கித் நாடக் அகாடமி, பத்மஶ்ரீ, பத்மபூஷண், கன்னட சாஹித்ய பரிஷாத், சாஹித்ய அகாடமி, காளிதாஸ் சம்மன். ராஜ்யோத்ஸவ போன்ற மாபெரும் விருதுகளை பெற்றுள்ளார்.

திரைதுறையில் 10 தேசிய விருதுகள் ,தென்னிந்திய படங்களுக்கு 4 பிலிம்பேர் விருதுகள்,இந்தி படங்களுக்கு 4 பிலிம்பேர் விருதுகள் மற்றும் 6 கன்னட திரைப்பட விருதுகள் பெற்றுள்ளார்.

கன்னட நாடகங்களான மா நிஷாதா, யாயாடி, துக்ளக் போன்று 14 நாடகங்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் 5 நாடகங்களை எழுதியுள்ளார் மேலும் அவை அனைத்துமே ஆக்ஸ்வேர்டு யூனிவர்சிட்டி பிரஸில் வெளியானவை.

1970-ல் திரைதுறைக்கு வந்த இவர் சமஸ்கரா வின் மூலம் கன்னட இயக்குநராக அறிமுகமானவர்.இவரது முன்றாவது படத்தில் பாலிவுட்டில் கால் பதித்தார். நான் அடிமை இல்லை என்ற தமிழ் படத்தில் ராஜசேகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் நீள குறிஞ்சி பூத்தாப்போல் படத்தில் நடித்தார். அன்று முதல் இன்று வரை பலத்தரப்பட்ட படங்களில் பல மொழிகளில் திரையில் தோன்றி நம் கண்களுக்கு விருந்தளித்தவர் கிரிஷ் கர்னாட் அவர்கள். 2019ல் வரவிருக்கும் படங்களில் நடிக்க ஒப்பந்தமிட்டிருந்தார். இவர் நடித்த இறுதி தமிழ் படம் சூர்யா அவர்களின் 24 படமே.

இவர் 11 படங்களை ஹிந்தி மற்றும் கன்னடத்தில் இயக்கியுள்ளார். ஆங்கிலத்தில் 10றழகும் மேற்பட்ட நாடகங்களை மொழிபெயர்த்துள்ளார்.
இவ்வாறு அனைத்து துறைகளிலும் தனித்துவமாக மேலும் தனது எழுத்துக்களாலும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தியவர் கிரிஷ் கர்னாட் அவர்கள்.

பலவேறு உடலநிலை காரணமாக இன்று பெங்களூரு மருத்துவமணை ஒன்றில் உயிர் நீத்தார்.இவ்வாறு தான் எழுதிய எழுத்துக்களை நாடகத்தில் நம்முடன் பகிர்ந்து கண்டவர். தன்னை இலக்கியத்திற்காகவும், நாடகத்திற்காகவும் அர்பணித்து இறுதி வரை அயராது உழைத்தவர் இவரே. நாடகத்துறையும் திரைதுறையும் மெருகேற்றியதற்காக அயராது உழைத்தவர்களில் இவரும் ஒருவர் என்றால் அது மிகையாகாது. இவரை போன்ற எழுத்தாளர்களின் வரிகளும், அவர்களின் பேனாக்களுமே இவர்களின் வெற்றி திளகங்கள். இவர் எழுத்தால் உயர்ந்து நின்றார் தன்னுடைய நடிப்பால் தனித்து காணப்பட்டார். நான்கு சகாப்த்தங்களாக எழுதிய இவரின் பேனா வரிகள், இன்னும் எத்தனை சகாப்த்தங்கள் கடப்பினும் மறையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*