Ghazi Movie Review

1971 ஆண்டின் சொல்லபடாத காஸியின் வரலாறானது, 2017ன் காஸியானது சொல்லும் படியான வரலாறு படைத்ததா… .பார்ப்போம்.
இப்படத்தின் விமர்சனத்திற்க்குள் செல்லும் முன் நாம் காஸியின் வரலாறை கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும். இதுவரை இந்தியாவிற்க்கும் பாகிஸ்தனிற்க்கும் நான்கு முறை போர் நடந்துள்ளது ஆனால் இந்த காஸியானது ஒரு சொல்லபடாத வரலாறாகவே இதுவரை இருந்தது.
1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிற்க்கும் பங்களாதேஷ்க்கும் ஏற்ப்பட்ட போரில், பி.என்.எஸ் காஸி என்ற பாகிஸ்தானின்
நவீன நீர்மூழ்கி கப்பலை, இந்தியாவின் ஐ.என்.எஸ் ராஜ்புட் என்ற நீர்மூழ்கி கப்பலின் மூலம் எப்படி நாம் நம் இந்திய நாட்டை பாதுகாத்தோம் என்பது தான் இந்த காஸி.
இப்படத்தை பற்றிய அலசலை பார்ப்பதற்க்கு முன் இப்படத்தின் இயக்குனருக்கு கைதட்டலை கொடுத்தாக வேண்டும். படத்தின் ஆரம்பத்தில் இக்கதையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே என்று கூறாமல் இதுதான் இக்கதை என்று கூறியது புதிதாக இருக்கும் உங்களுக்கு.

 

சட்டத்தினை மீறும் ஒரு கேப்டனாக வரும் கே.கே.மேனன், சட்டத்தை மதிக்கும் ஒரு துணை கேப்டனாக வரும் ராணா டகுபதி, கேப்டனின் கட்டளைகளை நிறைவேற்றும் கப்பலின் தலைமை மாலுமியாக வரும் அதுல் குல்கர்ணி, கப்பலின் ஒரு தொழில்நுட்ப வல்லுனரான பரத் ரெட்டி மற்றும் கப்பலில் பணியாற்றும் சிப்பாய்கள் இவர்களுக்கு நடுவில் எதிர்பாராமல் அந்த கப்பலில் பயணிக்கும் தாப்ஸி என அனைவரும் இணைந்து எப்படி பாகிஸ்தானின் காஸியிடம் யுத்தம் செய்தார்கள் என்பதுதான் இதன் மீதிக்கதை.

அர்ஜூனாக வரும் ராணா அட நம்ம பாகுபலி ராணாவா இது என்று நம்மை சொல்ல வைக்கிறார் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தனது கேப்டனிடம் வாதம் செய்யும் பொழுதும், படத்தின் இறுதியில் கப்பலை வழிநடத்தும் பொழுதும் அனைவரையும் ரசிக்க வைக்கிறார்.

சிங்காக வரும் கே.கே.மேனன் யாருப்ப இவர் இப்படி இருக்கிறாரே என்று நம்மை சொல்ல வைக்கிறார். தேவராஜாக வரும் அதுல் குல்கர்ணி இதுவரை அதிகமான படங்களில் அவரை வில்லனாகவே பார்த்த நமக்கு இந்த படத்தில் ஒரு புதுமையான நடிப்பை அவரிடத்தில் நாம் பார்க்க இயலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தனக்கு குழந்தை பிறந்த செய்தியை கேட்டும் தனது கடமையை செய்வதும், இறுதியில் ராணாவை தலைமை ஏற்க சொல்லும் போதும் அட இவரையா நாம இத்தன நாளா வில்லன் என்று சொன்னோம் என்று கூற வைக்கிறது. இதை தவிர தாப்ஸி, பரத் ரெட்டி, நாசர், ஓம் பூரி என பலரும் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

இயக்குனர் சங்கல்ப் அவருக்கு இது முதல் படம் என்பது அவர் சொல்லித்தான் நமக்கு தெரியனும் போல என்பது போல் திரைக்கதையில் முழுகவனத்தையும் செலுத்தியுள்ளார். படத்தின் இசையமைப்பாளர் கே இவரின் இதற்கு முன்னர் வந்த படங்கள் பெரிதும் பேசபடவில்லை என்றாலும் இந்த படத்தின் மூலம் இனிமேல் பேசப்படுவார் ஏனென்றால் அவரின் பின்னணி இசையும் இப்படத்திற்கு பலத்தை சேர்த்துள்ளது. மேலும் ஷிவம் ராவின் கலையானது ஒரு நிஜ நீர்மூழ்கி கப்பலை நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறது. இதைத்தவிர ஸ்ரீகர் பிரசாந்த்தின் படதொகுப்பானது  கத்திரியை வைத்து வெட்ட வேண்டிய இடங்களில் வெட்டியுள்ளார்.

இப்படத்தின் ப்ளஸ் என்னவென்றால் ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் இப்படத்தின் திரைக்கதை. ஒரு நிஜ நீர்மூழ்கி கப்பலை நம் கண்முண்னே கொண்டு வந்த கலை வடிவமைப்பு மற்றும் தத்ரூபமான VFX காட்சிகள் தாய்நாட்டை நேசிக்க வைக்கும் இப்படத்தின் வசனங்கள் கடைசியாக திரையரங்கில் போடப்படும் இப்படத்தின் தேசிய கீதத்தில் அனைவரும் எழுந்து நிற்ப்பதே இப்படத்தின் வெற்றியை சொல்லாமல் சொல்கிறது.

சில குறைகள் இருந்தாலும் ஆரம்பம் முதல் இறுதிவரை கதையயை விட்டு ரசிகர்களை நகர விடாமல் செய்திருப்பதால் குறைகள் எதுவும் பெரிதாய் தெரியவில்லை.
மொத்தத்தில் இந்த காஸியை பற்றி சொல்லவேண்டுமென்றால் கடலுக்கடியில் ஒரு யுத்த பயணம் செய்ய வேண்டுமா.. யோசிக்காமல் இந்த காஸிக்கு செல்லுங்கள்.
8.5

Great

Story - 9
Screenplay - 8
Direction - 9
Music - 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*