கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – விமர்சனம்

தயாரிப்பாளர் சி.வி. குமார், மாயவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினர் .இந்நிலையில், அவர் அடுத்ததாக இயக்கியுள்ள கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படம் தற்போது வெளியாகியுள்ளது.

தனது காதல் கணவனை போலி என்கவுண்டர் செய்யும் போலீஸ்காரர்களையும் அதற்கு உடந்தையாக இருக்கும் போதை மாஃபியா கும்பலையும் காதலனை இழந்த பெண் எப்படி பழிவாங்குகிறாள் என்பதே கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படத்தின் கதை.

நாயகி பிரியங்கா ரூத், அப்பாவி பெண்ணாகவும், அதிரடி நாயகியாகவும் அசத்தியுள்ளார்.

வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா படங்களில் வில்லனாக நடித்துள்ள டேனியல் பாலாஜி, இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒரு பெண்ணின் மீது கொண்ட காம பசி, ஒரு போதை மாஃபியா கூட்டத்தையே எப்படி கூண்டோடு அழிக்கிறது என்பதை திரைமொழியில் இயக்குநர் சி.வி. குமார் அழகாக படம் பிடித்து காண்பித்துள்ளார்.

வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன் என படத்தில் நடித்துள்ள அனைத்து நட்சத்திரங்களும் ஒரு கேங் த்ரில்லர் படத்துக்கு ஏற்ற வகையில் நடித்துள்ளனர்.

புதுமுக நாயகி பிரியங்கா ரூத், சில இடங்களில் பெர்ஃபார்ம் பண்ணவில்லையோ அல்லது அவ்வளவுதான் அவரது நடிப்பா என்ற சந்தேகத்தையும் வரவழைக்கிறது.

எல்லா தமிழ் சினிமாவிலும் கதை பஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ரசிகர்களுக்கு ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்‌ஷன் த்ரில்லரை கொடுத்த விதத்தில் இயக்குநர் பாஸாகி விட்டார்.

Good

  • Dialouges
  • Comedy

Bad

  • Lag in Screenplay
6.7

Fair

Story - 8
Screenplay - 7
Direction - 7
Artist - 7
Music - 7
Cinematography - 8
Editing - 7
Stunt - 7
Dance - 8
Art - 7
- 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*