பிரபல கலை இயக்குனர் கோபிகாந்த் காலமானார்.


பிரபல திரைபட கலைஇயக்குனர் GK என்கிற கோபிகாந்த் நேற்று நள்ளிரவு காலமானார்.
இருதய பிரச்சனைகானமாக கடந்த 14.9 17 அன்று மதியம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு காலமானார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய்காந்த், கமல் அஜீத், விஜய் போன்ற நடிகர்கள் உட்பட கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
தற்போது சின்னத்திரை நடிகராக கலசம் தங்கம் கங்கா போன்ற தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
அவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும் ஹேமா என்ற மகள் கிருஷ்ணகாந்த் என்ற மகன் உள்ளனர்.அவரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு போரூரில் உள்ள மயானத்தில் நடக்கிறது.வளசரவாக்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

முகவரி:-
எண் 16, அன்பு நகர் பிரதானசாலை.
ஶ்ரீதேவி குப்பம்
வளசரவாக்கம்
சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*