எந்திரன் 2.0 லோடிங்.


எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் 2.O மிகப் பெரிய அளவில் தயாராகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர்அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம், சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் 2.O மேக்கிங் வீடியோ, படக் குழுவினரால் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது 2.O படத்தின் படத்தின் இசை, டீசர், மற்றும் டிரைலர் வெளியிடப்படும் தகவல் குறித்து லைகா புரொடக்ஷன்ஸ், ராஜூ மகாலிங்கம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், 2.O படத்தின் இசை வெளியீடு, அக்டோபர் மாதம் துபாயிலும், டீசர், ஐதராபாத்திலும், டிரைலர், நம்ம சிங்கார சென்னையிலும் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*