Ennodu Vilayadu Movie Review

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படம் தான் நடிகர் பரத் கடைசியாக தமிழில் நடித்தது. அதன்பின் இரண்டு வருடங்கள் கழித்து அருண் கிருஷ்ணசுவாமியுடன் இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் என்னோடு விளையாடு. இரண்டு வருடங்கள் கழித்து பரத் எப்படி விளையாடியிருக்கிறார் என்பதை நாம் விமர்சனத்தில் பார்ப்போம்.

ஒரு காலத்தில் பல குடும்பங்களை அழித்த குதிரை பந்தயத்தை அரசு தடை செய்தாலும் இன்னும் அதன் தாக்கம் ஒரு சிலரிடம் எப்படி ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதையும், குதிரை பந்தயங்களில் உள்ள சில பந்தய நிர்ணயங்களை காதல் மற்றும் ஆக்ஷன்  கலந்த ஒரு மசாலா கதைதான் இந்த என்னோடு விளையாடு படத்தின் கதை.

குதிரை பந்தயத்தினால் கடனில் இருக்கும் பரத், அந்த கடன்களை அடைத்தால் தான் சாந்தனியுடன் சேரமுடியும், தனது காதலியான சஞ்சிதாவின் ஏலம் போகவிருக்கும் வீட்டை எப்படியாவது மீட்கவேண்டும் என்று இருக்கும் கதிர். இதை தவிர ஐந்து வருடங்கள் கழித்து குதிரை பந்தயத்தில் தன் குதிரையை களமிறக்கி மீண்டும் தான் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று இருக்கும் ராதா ரவி.
தன்னுடைய குதிரைதான் வெற்றி பெற வேண்டும் என்று இருக்கும் யோக் ஜேபி என இவர்களுக்குள் நடக்கும் விளையாட்டில் எந்த குதிரை யாரை வெற்றியடைய வைத்தது என்பதுதான் இப்படத்தின் மீதிக்கதை.

பரத் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் வந்திருப்பதால் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனை என்றும் கூட சொல்லலாம். கதிர் இதுவரை அவர் எப்படி நடித்தாரோ அதேபோலத்தான் இப்படத்திலும் நடித்துள்ளார், பார்ப்பதற்க்கு அமைதியாக இருந்தாலும் சண்டை காட்சிகளின் போது ஒரு யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். சாந்தினிக்கும் சரி, சஞ்சிதாவுக்கும் சரி ஒரு வழக்கமான தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் ரோல்கள் என்றாலும் இருவருமே சிறப்பாக செய்துள்ளனர். ராதா ரவி தனக்கான வில்லன் தோரனையை தனது யதார்த்தமான நடிப்பில் கொடுத்துள்ளார். இவர்களை தவிர யோக்ஜேபி, கணேஷ் என அனைவரும் தங்களுக்கு உண்டான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். ஏற்கனவே சூதாட்டங்களை வைத்து தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வந்திருந்தாலும் இப்படி ஒரு கதைக்களத்தை இயக்குனர் அருண் கிருஷ்ணசுவாமி காட்டியி்ருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது. இப்படத்தின் இசையமைப்பாளர்கள் இருவர் என்பதால் என்னவோ தெரியவில்லை படத்தில் பாடல்கள் அதிகமாக உள்ளதுபோல் தோன்றுகிறது. குறிப்பாக மோசஸ், சுதர்ஷன் இருவருமே பின்னனியில் சிறப்பாக வேலை பார்த்துள்ளனர்.

இதை தவிர யுவாவின் ஒளிப்பதிவு, கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு என இன்னும் கொஞ்சம் பலத்தை சேர்த்துள்ளது.

பரத், கதிர் இவர்கள் இருவரின் யதர்த்தமான நடிப்பு இப்படத்திற்க்கான ஒரு ப்ள்ஸ் என்றும் கூறலாம், படத்தின் பின்னனி இசை, குதிரை பந்தயங்களை தத்ரூபமாக காட்டியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு, ராதா ரவியின் யதர்த்தமான நடிப்பு.

இதை தவிர இப்படத்தின் குறைகள் என்னவென்றால் கதைக்குள் மெதுவாக செல்லும் இதன் முதற்ப்பாதி, அனைவராலும் யூகிக்க கூடிய இதன் திரைக்கதை.

மொத்தத்தில்  என்னோடு விளையாடு, ஒரு முறை பந்தயம் கட்டி விளையாடலாம்.

7.3

Good

Story - 7
Screenplay - 7
Direction - 7.5
Music - 7.5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*