கதை, திரைக்கதை அமைப்பதில் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும். அவை கதை களங்களை பொருத்து வேறுபடும். ஆனால் தான் எடுக்கும் படங்கள் அனைத்திலும் காதலுக்கும், காதல் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும் எப்போதுமே தனித்துவம் கொடுத்து இயக்குகிறார் ஒரு இயக்குனர். அவருடைய படத்தில் வரும் கதாநாயகிகளும் மற்ற படங்களை காட்டிலும் அவர் எடுக்கும் படங்களில் காதலிக்கவே பிறந்தவர்களை போன்று அழகாக காட்டுவார்.
திரையுலக வரலாற்றில் காதல் கதைகளை அடிப்படையாக கொண்டு ஏரளமான படங்கள் வந்திருக்கிறன. நம் இயக்குனரோ எந்த படம் எடுத்தாலும் காதலை மிக அழகாகவே காட்டியிருப்பார்.
பிப்ரவரி 18, 2001-ல் வெளிவந்த மின்னலே படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக களம் இறங்கியவர் கௌதம் மேனன். முழு நீள காதல் படமான மின்னலே எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. அறிமுக இசையமப்பாளாரன ஹரிஸ் ஜெயராஜின் இசை படத்துக்கு வலு சேர்க்க வெண்மதி வெண்மதி நில்லு, வசீகரா என்ற இரு பாடல்களை பாடத உதடுகளை பார்க்கவே முடியாது. நடிகர் மாதவனின் தமிழ் சினிமா வாழ்க்கையின் மிக முக்கிய படமாகவும், நடிகை ரீமாசென்னுக்கு தமிழ் படத்தில் ஒரு நல்ல அறிமுகமாகவும் அமைந்தது மின்னலே. ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காதலித்து கை பிடிக்கும் ஒரு இளைஞனின் காதலை அழகாக சொல்லிய படம் மின்னலே.
அடுத்ததாக அவர் தொடர்ந்து இயக்கிய 2 படங்களுமே முதல் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்கோணங்களை கொண்ட படம். காக்க காக்க படத்தில் நடிகர் சூர்யா ரௌடிகளை எதிர்க்கும் கதாபாத்திரத்திலும், வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் தொடர் கொலைகளை செய்யும் குற்றாவளிகளை கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தினர். இவ்வாறாக ஒரு அதிரடி மற்றும் மர்மம் கலந்த படத்திலும், காதல் என்ற மலரின் வாசத்தை வீச வைத்தார் இயக்குனர். காதல் காட்சிகள் வெறும் காட்சிக்களுக்காக மட்டுமில்லாமல் ஒரு சராசரி மனிதனின் காதலுக்கும் காவல்துறை போன்ற பணிகளில் இருப்பவரின் காதலுக்கும் இடையே இருக்கும் பக்குவத்தை களப்பணி செய்து திரையில் காண்பித்தார் கௌதம்.
வாரணம் ஆயிரம் படத்தில் நடித்த சூர்யா அப்பா மற்றும் மகன் வேடங்களில் பயணித்திருப்பார். அப்பாவிற்கும் மகனுக்கும் இடையில் இருக்கும் பாச பிணைப்பை சொல்லும் கதையாக இருந்தாலும். இரு கதாபாத்திரங்களிலும் இருக்கும் ஒற்றுமை காதல் மட்டுமே. அப்பா சூர்யாவின் சிம்ரனுடனான காதலை காண்பித்தார் கௌதம். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வரும் காதலும் அதில் ஏற்படும் தோல்வியும் அதை அவன் எதிர் கொள்வதையும் எதார்த்ததுடன் காட்டியிருந்தார்.
இதைபோல் அவர் எடுத்த அடுத்தடுத்த படங்களான விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடைமையாடா போன்ற எல்லா படங்களும் வெவ்வேறு கதை அம்சங்களை கொண்டிருந்தாலும் அனைத்திலும் காதல் என்ற உணர்வை திரைக்கதையில் உயிரோட்டமாய் காட்டியிருப்பார் காதல் நாயகன் இயக்குனர் கௌதம் மேனன்.