கதைக்கரு : தமிழகத்தையே உலுக்கும் கொடூர வட இந்திய கொள்ளையர்களை , பிடிக்க கடினமாக முற்படும் இளம் காவல் அதிகாரியும் அவரது டீமும் சந்திக்கும் நடைமுறை சிக்கல்களும் , பெரிதாக சாதித்து காட்டியும் அவர்களுக்குபின்னாளிலும் ,மறுக்கப்படும் உரிமைகளும் தான் இப்படக்கரு.

கதை : நியாயமான நேர்மையான இளம் டிஎஸ்பி . தீரன் திருமகன் – கார்த்தி அவர் போலீஸ் டிரெயினிங் முடித்து, கண்டவுடன் காதல் கொண்ட பக்கத்து வீட்டுப் பெண் ப்ரியா – ரகுல் ப்ரீத் சிங்கை, தன் மனம் விரும்பியபடியே கைப் பிடித்த கொஞ்ச நாட்களிலேயே, தன்னுடைய நேர்மை மற்றும் கடமை உணர்வால் தமிழ்நாட்டில் உள்ள பல இடங்களுக்கும் தூக்கி அடிக்கப்படுகிறார். ஒரு வழியாக ஒரு கட்டத்தில் அவர் அங்கு சுத்தி , இங்கு சுத்தி திருவள்ளூர் மாவட்டபொன்னேரி சரக டிஎஸ்பி-யாக நியமிக்கப்படுகிறார். அப்போது நெடுஞ்சாலைக்கு அருகில் தனியாக இருக்கும் பெரிய வீடுகளில் அடிக்கடி நடக்கும் கொலை, கொள்ளைகளைப் பற்றிய விசாரணையில்
இறங்குகிறார்.

இச்சமயத்தில் , அத்தொகுதி ஆளும் கட்சி எம்எல்ஏவை அவரது வீட்டில் கொள்ளையடிக்க புகுந்தபோது கொலை செய்த பிறகுதான் அரசு தரப்பில் விசாரணையை தீவிரப்படுத்துகிறார்கள். அதைத் தொடர்ந்து வடஇந்தியாவில் பதுங்கியிருக்கும் அந்தகொள்ளைக் கூட்டத்தைக் தேடிப்பிடிக்க , தன் தலைமையில் தனி போலீஸ் படையுடன் கார்த்தி
களம் இறங்குகிறார். அச்சமயத்தில் , அந்த விசாரணைக்கான தேடுதல் வேட்டைக்கு கார்த்தியின் டீமில் இருக்கும் இன்ஸ்பெக்டரான போஸ் வெங்கட் , வட இந்தியாவுக்கும் , கார்த்தி லோக்கலில் தீவிர தேடுதல் வேட்டைக்கும்mசென்றிருக்கும் நேரத்தில் . போஸ் வெங்கட் குடும்பத்தார், அந்தக் கொள்ளையர்களால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவ ஒடிய கார்த்தியின்மனைவி ரகுல் ப்ரீத் சிங்கும் பலமாகத் தாக்கப்படுகிறார். இதன் பின் வெகுண்டெழும் டிஎஸ்பி . தீரன் திருமகன் – கார்த்தி, கொள்ளையர்களை அவர்கள் சர்வ வல்லமை பொருந்தியவர்களாக வாழும் வட இந்தியா சென்று கூண்டோடு பிடித்தாரா?  என்பதுதான் “தீரன் அதிகாரம் ஒன்று “.படத்தின்  விறு விறு கதை.

கதாநாயகர் : டி.எஸ்.பி.தீரன் திருமகன் என்ற பெயருக்கேற்றபடி தீரமாகசெயல்படும் டிஎஸ்பியாக கார்த்தி, கடமை , கண்ணியம் , கட்டுப்பாடுஆகியஅதிகாரத்துடன் நம் மனதில் இடம் பிடித்து விடுகிறார். ரகுல் ப்ரீத்துடனான ஆரம்ப காதல் காட்சிகளில் எக்கச்சக்க ரொமான்ஸ் காட்டும் காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார்க  கார்த்தி .

கதாநாயகி :ப்ரியா எனும் கார்த்தியின் காதல் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங், பலமுறை பனிரெண்டாம் வகுப்பு பெயிலான ஒரு பெண் எப்படிப்பட்ட மன நிலையில் இருப்பார் என்பதைஅப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார்.கார்த்தியுடனான காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

வில்லன் :படத்தில் வில்லனாக வரும் அபிமன்யு சிங், கொடூர வட இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவன் இப்படித்தான் இருப்பாரோ என நம்மை பயமுறுத்துகிறார்.

தொழில்நுட்பகலைஞர்கள் : திலீப் சுப்பராயனின் ஆக்ஷ்ன் இயக்கம் , அதிரடி இயக்கம்.என்பதும் , டிசிவனான்டேஸ்வரனின் படத்தொகுப்பில்.,இடைவேளை வரை காட்சிகள் நகர்வதேதெரியவில்லை. கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங்காதல்காட்சிகள்,கொள்ளையர்களின் அட்டகாசம்,கார்த்தியின் தேடுதல் ஆரம்பம் ..என மொத்தப் படமும் விறுவிறுப்பாக நகர்வதும் … படத்திற்கு பெரும் பலம்

ஜிப்ரான் இசையில் பின்னணி இசை படத்தின்வேகத்தை பரபரப்புடன் நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறது.

இயக்கம் : “சதுரங்க வேட்டை” இயக்குனர் ஹெச். வினோத்தின் எழுத்து , இயக்கத்தில்., நியாயமான , நேர்மையான இளம் அதிகாரிகளின் கடமை உணர்வில்., ஆளும் வர்க்கத்தினரும் ,அதிகார வர்க்கத்தினரும் குறுக்கிடாமல் , குளறுபடி செய்யாமல் இருந்தாலே இந்தியாவில் எப்பேற்பட்ட குற்ற செயல்களையும் கண்டுபிடித்துஉரிய தண்டனை தர முடியும் எனும் கருத்தோடு வந்திருக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு ., அதிகாரம் இரண்டும் உடனடியாக ஆரம்பமாகலாம் …. எனும் அளவிற்கு தீரன் அதிகாரம் ஒன்று தீர்க்கமாக வெற்றி பெறும் எனலாம்!

8.2

Great

Story - 8
Screenplay - 8
Direction - 8
Artist - 8
Music - 8
Cinematography - 9
Editing - 8
Stunt - 8
Dance - 8
Art - 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*