வில்லனுக்கு பாடல் பாடிய நடிகர் தனுஷ்

படைவீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பாடகர் விஜய் இயேசுதாஸ், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. நாயகியாக அம்ரிதா ஐயர் மற்றும் இயக்குனர் மனோஜ் குமார், இயக்குனர் கவிதா பாரதி, நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசப், கன்யா பாரதி  உள்ளிட்ட பலர் நடித்திருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் வேலையில் சமீபத்தில் “படைவீரன்” படத்தை பார்த்த தனுஷ் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். பின் இயக்குனர் தனா, இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, விஜய் யேசுதாஸ் மற்றும் கவிஞர் பிரியனுடன் அமர்ந்து, தனுஷ் ஒரு பாடல் பாட இருப்பதை விளக்கியுள்ளார். கார்த்திக்ராஜாவின் அருமையான டியூனிர்க்கு பிரியனின் வரிகளில்  “ லோக்கல் சர்க்கா பாரின் சரக்கா” என்ற படு துள்ளலான பாடலை பாடி கொடுத்துள்ளார் நடிகர் தனுஷ். ஒரு பாடகர் நடிக்கும் படத்திற்கு ஒரு பிரபல நடிகர் பின்னணி பாடியிருப்பது இதுவே முதல் முறை. மேலும் மாரி 2 படத்தில் தனுஷிற்கு வில்லனாக விஜய் இயேசுதாஸ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறுகிறது.

EVOKE PRODUCTIONS A. மதிவாணன் தயாரிப்பில் மணிரத்தினத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” படத்தை இயக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*