தனுஷ் இயக்குனராக அவதாரம் எடுத்து மாறுபட்ட காதல் காவியத்தை தந்த ப.பாண்டி !

தனுஷ் இயக்குனராக அவதாரம் எடுத்து மாறுபட்ட காதல் காவியத்தை தந்த ப.பாண்டி !

தனுஷ் இயக்குனராக  அவதாரம் எடுத்து மாறுபட்ட காதல் காவியத்தை தந்த ப.பாண்டி !

2017 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டில் பல படங்களுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனா திரைப்படம் தான் தனுஷ் இயக்கிய ப.பாண்டி .இந்த படத்தினை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார்,

நடிகர் , பாடகர் ,பாடலாசிரியர் ,தயாரிப்பாளர்எ ன பன்முக திறமை கொண்டு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் என்று பேர் ,புகழ் பெற்றவர்தான் தேசிய விருது நாயகன் தனுஷ்.

பவர் பாண்டி படத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்து வெற்றி பெற்று ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் தனுஷ்.

 

மனதால் கூட, முன்னாள் காதலியை தேடி கொண்டிருக்கும் வயது முதிர்ந்த ஒவ்வொருவனும் “பவர் பாண்டி” தான் என்பதையும் முதல் காதலின் ஆழத்தையும் வயாதானபின் பெற்றோரின் மன நிலையையும் அருமையாக தனுஷ் அவர்கள் இந்த படத்தில் தெளிவாக சொல்லியிருப்பார்.

 

மண்வாசனையோடு மழைச்சாரலும் முகத்தில் பட்டால் ஏற்படும் பரவசத்தை இந்த படத்தின் கிராமத்து பகுதிகளில் வரும் காட்சிகளில் தனுஷ் அசதி இருப்பார்.

இளைய ராஜாவிற்கு ஈடு இணை எவரும் இல்லை .அவர் உருவாக்கிய பாதையில் சீன் ரோல்டன் அச்சரம் பிசகாமல் பாடல்கள் அமைப்பார்.இதுவே இவரது வெற்றிக்கு காரணம்.

ப.பாண்டி படத்தின் இனிமையான பாடல்களின் மூலம்
ஷான் ரோல்டன் ராஜாவை நினைவூட்டுவார்,இந்த இடத்தின் வெற்றிக்கு ஷான் அவர்களின் இசை ஒரு முக்கிய காரணம் .கிராமத்து மண்வாசனை நிறைந்த பாடல்களாக இருந்தது இந்த படத்தில்.

ஒரு உணர்வுபூர்ணமான நடிப்பில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ராஜ்கிரண்.காதலியை தேடி செல்லும் புல்லெட் பயணம் ,ரேவதியை சந்தித்து பேசும் காட்சிகளில் ரேவதியும் ,ராஜ்கிரணும் அருமையான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்கள்.

 

நடிகர் பிரசன்னா ராஜ்கிரணின் மகனாக நடித்து இருப்பார்.
இவரது சில வசனங்கள் நெஞ்சை உருக்க கூடியதாக இருந்திருக்கும்.தந்தை – மகன் கதாபாத்திரத்தில் இருவரும் உச்ச நடிப்பை காட்டி இருப்பார்கள்.

மன்மதராசா பாடலில் தனுசுடன் நடனமாடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகை சாயா சிங் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி தனுஷின் பவர் பாண்டி படத்தில் நடித்திருந்தார்,இந்த இடத்தின் இவர் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

 

நடிகை மடோனா ரேவதியின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்து மனதை கொள்ளையடித்துள்ளார்.நடிகை வித்யா மடயோனாவின் தோழியாக நடித்த காட்சிகள் அனைவரும் ரசிக்கும் வகையில் அமைத்திருக்கும்.

எடிட்டர் பிரசன்னா GK அவர்களின் முக்கிய பங்களிப்பு மேலும் இந்த படத்திற்கு வலுகூட்டியது. வேல்ராஜ் அவர்களின் ஒளிப்பதிவு ,ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா போன்ற தொழிநுப கலைஞர்களின் பங்களிப்புகளை ,அவர்களின் சிறந்த பணிகளாலும் ப பாண்டி வெற்றிநடை போடு 75 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது,

மேலும் ரசிகர்கள் ப.பாண்டி இரண்டாம் பாகத்திற்க்காக காத்திருக்கின்றனர் ,
பவர்பாண்டி காதல் ,ஓர் அன்பின் ஓவியம்,
காலங்கள் கடந்தாலும் என்றும் மனதில் புதைந்து கிடக்கும் ஓர் அழகான காவியம்.வெற்றிகொடி நாட்டி பாராட்டை தட்டி தூக்கிய தனுஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*