தேவராட்டம் விமர்சனம்

நடிகர்கள் – கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி
தயாரிப்பு – ஸ்டுடியோ க்ரீன்
இயக்கம் – முத்தையா
இசை – நிவாஸ் கே பிரசன்னா

அழகான ஹீரோவாக வளம் வந்த கௌதம் கார்த்திக் இந்த படத்தில் முரட்டு நாயகனாக நடித்துள்ளார் .சண்டை காட்சிகளில் இவர் மிரட்டுகிறார் . கதா நாயகன் வழக்கறிஞர் படப்பிடிப்பை முடித்து ஒரு வழக்கறிஞரிடம் உதவியாளராக பணிபுரிகிறார் .

வில்லன் பெப்சி விஜயன் மகன் ஒரு பெண்ணை சீரழித்து கொன்ற கட்டப்பஞ்சாயத்துக்கு செல்கிறார். அவருக்கும் கவுதமுக்கும் இடையே நடக்கும் சண்டையில் வில்லன் மகன் இறந்து விடுகிறார் .

தன் மகனை கொன்ற கவுதம் கார்த்திக்கை கொள்ள துடிக்கும் வில்லனுக்கும் நாயகனுக்கும் இடையே நடக்கும் ரத்த போராட்டம் இந்த தேவராட்டம் .

படத்தில் நாயகனுக்கு 6 அக்காக்கள் . வினோதினி மூத்த அக்கா , அம்மாவை போல் கெளதம் கார்த்திக்கை பார்த்து கொள்கிறார் . இந்த செண்டிமெண்ட் காட்சிகளில் முத்தையா க்ளாப்ஸ் வாங்குகிறார் .

படத்தில் நாயகியாக மாஞ்சிமா மோகன் வருகிறார் . இவருக்கும் நாயகனுக்கும் இடையே நடக்கும் காதல் , மற்றும் பாடல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

வில்லன் பெப்சி விஜயன் கெளதம் காத்திகை கொள்ள நினைக்கும் வேலையில் ஹீரோவின் அக்காவையும் , மாமாவையும் வெட்டி கொன்று விடுகிறார் . பின்பு கெளதம் கார்த்திக்குக்கும் வில்லனுக்கும் ஏற்படும் மோதல் என்ன ? யார் யாரை வெட்டி வீசினார்கள் என்பது தான் மீதி கதை .

படத்தில் சக்தி சரவணா ஒளிப்பதிவில் சண்டை காட்சிகள் பிரமாதம் , நிவாஸ் இசை சண்டை காட்சிகள் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் அற்புதம் .

பெண்களின் மதிப்பு , குடும்ப உறவு , ஆக்சன் , காதல் , என வெறித்தனமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் முத்தையா .

மேலும் படத்தில் சாதி பற்றி எதுவும் சொல்லவில்லை . படத்தில் சொல்ல வந்த கருத்து இன்றைய நடைமுறைக்கு ஏற்றது தான் .குடும்பத்துடன் கண்டுகளிக்க சிறந்த படம் .இயக்குனர் முத்தையா மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் .

Good

  • Dialouges
  • Comedy

Bad

  • Lag in Screenplay
6.9

Fair

Story - 7
Screenplay - 8
Direction - 7
Artist - 8
Music - 7
Cinematography - 8
Editing - 7
Stunt - 8
Dance - 7
Art - 8
- 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*