Bruce Lee Movie Review

ஜி.வி பிரகாஷ் தான் ஒரு இசையமைபாளர் என்பதை மறந்து விட்டார் போல அதற்கேற்றார் போல் தற்போது அதிகமான படங்களில் நடித்து வருகிறார். கடவுள் இருக்கான் குமாரு படத்திற்க்கு பிறகு ஜி.வி நடித்து தற்போது வெளிவந்திருக்கும் படம்தான் புரூஸ்லி. புருஸ்லி கோலிவுட் பந்தயத்தில் எப்படி மோதியுள்ளது என்று இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.

சிறு வயதிலிருந்தே எல்லா விஷயங்களுக்கும் பயப்படும் ஜி.விக்கு அவரின் அம்மா புருஸ்லி என பெயர் வைக்க அதன்பின் தன்னை புருஸ்லியாகவே நினைத்து கொண்டு வாழ்கிறார் ஜி.வி. படத்தின் ஹீரோயின் கிரித்தியிடம் காதல் வலையில் சிக்க இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். தனக்கு எதிராக இருக்கும் மன்சூர் அலிகானை முனிஷ்காந்த் கொலை செய்வதை போட்டோ எடுக்கும் ஜி.வி அதை தன் காதலியிடம் காட்ட, கிரித்தி அதை வெளி உலகிற்க்கு தெரியபடுத்தவேண்டும் என சொல்ல, போலீஸில் எல்லா இடங்களிலும் முனிஷ்காந்த்தின் ஆட்கள் இருப்பதால் போட்டக்களை நேரடியாக கமிஷ்னரிடம் கொடுக்கிறார் ஜி.வி.அதன் பின் கமிஷ்னரே முனிஷ்காந்த்தின் ஆள் என்பது தெரிய ஹீரோயின் கிரித்தியை கடத்துகிறார் முனிஷ்காந்த்.இறுதியில் முனிஷ்காந்த்திடம் இருந்து தன் காதலியை எப்படி ஜி.வி காப்பாற்றினார் என்பதுதான் மீதிகதை.

ஜி.வி இதற்கு முன்னர் அடுல்ட் காமெடி படங்களில் நடித்தாலும் தற்போது கதைகளை தேர்ந்தெடுப்பதில் கவணமாய் இருக்கிறார் என்று நம்மால் சொல்ல முடியாது ஏனென்றால் இதற்கு முன் அவர் நடித்த திரிஷா இல்லனா நயந்தாரா,எனக்கு இன்னொரு பேர் இருக்கு படங்களில் எப்படி நடித்தாரோ அதேபோல் தான் இந்த படத்திலும் நடித்துள்ளார்.ஹீரோயின் கிரித்தியின்  கிளாமருக்கு படம் முழுவதும் பஞ்சமில்லை.

பால சரவணனின் இதற்கு முன் வந்த படங்களில் அவருடைய காமெடிகள் இருந்தாலும், இந்த படத்தில் கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கிறது.மொட்டை ராஜேந்திரனை பற்றி சொல்லவே தேவையில்லை படத்தில் அவர் பல கெட்டப்களில் வரும் காட்சிகள் அனைத்தும் க்ளாப்ஸ். அந்த வகையில் ஆனந்த் ராஜும்,முனிஷ்காந்த்தும் தங்களுடைய பங்கை சிறப்பாக செய்துள்ளனர் குறிப்பாக ஆங்கில படங்களை அவர் பார்த்து செய்யும் சேட்டைகள் ரசிக்க வைக்கிறது.

இயக்குனர் பிரஷாந்த் பாண்டிராஜ் இன்னும் திரைக்கதையில் கொஞ்சம் கவணம் செலுத்தியிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.அதேபோல் ஜி.வியின் இசையும் ஜி.விதான் இந்த படத்திற்க்கு இசையமைதாரா என்பதையும் நம்மை யோசிக்க வைக்கிறது ஏனென்றால் நடிப்பிற்க்கு முக்கியம் கொடுத்த அளவிற்க்கு ஜி.வி இப்படத்தில் இசைக்கு முக்கியதுவம் கொடுக்கவில்லை, அடுத்தவர்களின் படங்களுக்கு சிறப்பாக செய்யும் ஜி.வி தன்னுடைய படத்திற்க்கு ஏன் இப்படி செய்து விட்டார் என்று பேச வைக்கிறது.பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு ஒரு வண்ண கலவையை நம் கண் முன் கொண்டுவந்துள்ளது என்றும் சொல்லலாம்.

இப்படத்தின் நிறைகள் என்னவென்றால் படத்தின் காமெடி காட்சிகள் குறிப்பாக மொட்டை ராஜேந்திரன் மற்றும் முனிஷ்காந்த் அவர்களின் காமெடிகள்

இப்படத்தில் குறைகள் சில இருந்தாலும் படத்தின் காமெடி காட்சிகள் அவற்றை பெரிதாக பேச வைக்கவில்லை.

7.5

Good

Story - 7.5
Screenplay - 7
Direction - 7.5
Music - 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*