தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்களுக்கான படங்கள் வருவது ரொம்ப குறைவுதான் அந்த வரிசையில் சாய் தனிசிக்காவின் நடிப்பில்,இசைஞானி இளையராஜாவின் இசையில்,அறிமுக இயக்குனர் பாணி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்தான் எங்க அம்மா ராணி.படம் எப்படி என்பதை இந்த விமர்சனத்தில் நாம் பார்ப்போம்.
படத்தின் தொடக்கத்திலேயே காணாமல் போன தன் கணவரை தேடிக்கொண்டிருக்கிறார் இரண்டு மகள்களுக்கு தாயாக இருக்கும் தன்ஷிகா. இதற்கிடையில் தன்ஷிகாவின்  இரு குழந்தைகளில் ஒருவர் ஒரு நோயினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகிறார்.அதன் பின் அந்த நோயானது தனது மற்றுமொரு மகளுக்கு இருப்பது தெரிய வர அவரை சிகிச்சைக்காக ஒரு குளிர்பிரதேசத்திர்ற்கு  அழைத்து செல்கிறாரர் தன்ஷிகா.சிகிச்சைக்கு சென்ற இடத்தில் தன்ஷிகாவின் மகளின் மேல் ஒரு ஆவி புகுந்துவிடுகிறது.இறுதியில் அந்த ஆவியானது தன்ஷிகாவின் மகளின் மேல் இருந்து வெளிவந்ததா,தன்ஷிகாவின் மகளுக்கு உடல்நிலை சரியானதா,இதனால் தன்ஷிகாவிற்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படம் முழுவதும் தன்ஷிகாவின் பங்கு அதிகமாக உள்ளது என்பதால் என்னவோ தன்ஷிகாவின் நடிப்பு ஒரு யதார்த்தத்தை கொடுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கதையின் முக்கியத்துவத்தை அறிந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருப்பதை நாம் பாராட்டியே ஆக வேண்டும். தன்ஷிகாவின் குழந்தைகளாக நடித்திருக்கும் வர்ணிக்கா,வர்ஷா இருவரும் படம் முழுவதும் அனைவரையும் ரசிக்க வைக்கிறாரார்கள்.குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் வர்ணிக்காவின் நடிப்பு க்ளாப்ஸ்.நமோ நாராயணன் இதற்கு முன்னர் வந்த படங்களில் பார்த்ததை போல் இந்த படத்தில் அவரை பார்க்க முடியாது. நடிப்பிலும் சரி தோற்றத்திலும் சரி நிறைய வித்தியாசங்களை காட்டியிருக்கிறார்.படத்தில் சில காடசிகள் வந்தாலும் கூட பாராட்டும்படி நடித்துள்ளார்.இவர்களை தவிர சங்கர் ஸ்ரீ ஹரி,அனில் முரளி,இயக்குனர் மனோஜ்குமார்,ரிந்து ரவி என அனைவரும் தங்கள் நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.குறிப்பாக சைனீஸ் மந்திரவாதியாக வரும் ஸ்டிவன் ரசிக்கும் படியான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இயக்குனர் பாணி இது முதல் என்பதால் முழு கவனத்தியும் செலுத்தி படத்தை இயக்கியுள்ளார்.அந்த வகையில் சில இடங்களில் யாராலும் யூகிக்க முடியாத அளவிற்கு திரைக்கதையை அமைத்துள்ளார்.இசைஞானி இளையராஜா தற்போது ஒரு சில படங்களுக்கே இசையமைக்கிறார் அந்த வரிசையில் அவர் இசையமைத்த ஒரு சில படங்களில் இந்த படமும் ஒன்று என்பதால் படத்தின் வெற்றிக்கு அவரின் இசையும் ஒரு பலமாக இருக்கிறது.குமரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஒரு பக்க பலமாக அமைந்துள்ளது.படம் முழுவதும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளதால் இதுவரை நாம் பார்த்திராத மலேசியாவின் பல இடங்களை நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார்.
இப்படத்தின் நிறைகள் என்னவென்றால் படத்தின் நாயகி தன்ஷிகா மற்றும் படத்தில் நடித்த அனைவரின் யதார்த்தமிக்க நடிப்பு.
படத்தின் ஒளி பதிவு மற்றும் மலேசியாவின் நாம் இதுவரை பார்த்திராத பல அழகான இடங்களை காட்டியிருப்பது .
படத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக அமைந்திருப்பது.யாரும் யூமிக்க முடியாத திரைக்கதை.
இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை.
இப்படத்தில் சிறு சிறு குறைகள் இருந்தாலும் படம் நகரும் வேகத்தில் அவை நம் கண்களுக்கு தெரிவதில்லை .
மொத்தத்தில் எங்க அம்மா ராணி இந்த கோடை காலத்தில் அனைத்து அம்மாக்களும் தங்களது குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய படம் .
8.6

Great

Story - 8.5
Screenplay - 8.5
Direction - 8.5
Music - 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*