வானரப்படை – பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் விரிசல்களை பற்றி சொல்லும் படம்

ஸ்ரீருக்மணி  பிலிம்ஸ் தயாரிப்பில்,  இயக்குனர் M.ஜெயபிரகாஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘வானரப்படை’.

இது ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களை மையமாகக் கொண்டு பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் சின்ன இடைவெளி தான் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தி விடுகிறது, என்ற கதைக்கருவை மையமாகக் கொண்டு உருவாகிவருகிறது. குழந்தை நட்சத்திரமாக தெலுங்கில் பிரம்மோட்சவம் படத்தில் அறிமுகமான ‘அவந்திகா’ இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். இவர் தமிழில் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். படத்தில் மேலும்,  அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் என்கிற ஆறு சிறுவர், சிறுமியர்கள்  நடிக்கிறார்கள். 9 வயதிலிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளின் கதை என்பதால் இயக்குனர் இந்த குழந்தை நட்சத்திர பட்டாளத்தை தேர்ந்தெடுத்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குனர், கதாசிரியர் அண்ணாதுரை கண்ணதாசனின் மகனுமான முத்தையா கண்ணதாசன் அறிமுகமாகிறார். மற்றும் பஞ்சுசுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி, ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஜெ.பிரகாஷ் , கே.ஆர். இயக்கிய பல படங்களில் இணை இயக்குனராகப் பணி புரிந்துள்ளார் மேலும் நேர் எதிர் என்ற வெற்றிப் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ள நிலையில் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*