அவளுக்கென்ன அழகிய முகம் திரைவிமர்சனம் !

நடிகர் : பூவரசன்

நடிகை : அனுபமா பிரகாஷ்

இயக்குனர் : கேசவன்

இசை : டேவிட் ஷார்ன்

ஒளிப்பதிவு : நவநீதன்

காதலில் தோல்வியடைந்த நண்பர்கள் மூன்று பேர், காதலால் பிரிந்தவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

இந்த சமயத்தில் காதலியை பிரிந்து இருக்கும் நாயகன் பூவரசனை சந்திக்கிறார்கள்.

இவருடைய காதலை சேர்த்து வைப்பதற்காக பவர் ஸ்டார் காரில் நான்கு பேரும் பயணிக்கிறார்கள்.

செல்லும் வழியில் நண்பர்கள் அனைவரும் தங்களுடைய காதல் எப்படி பிரிந்தது என்று பகிர்ந்துக் கொள்கிறார்கள்.

இறுதியில், நாயகன் பூவரசனின் காதல் எப்படி பிரிந்தது? நண்பர்கள் பூவரசனின் காதலை சேர்த்து வைத்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

பூவரசன்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பூவரசன் துறுதுறுவென நடித்து ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார்.

நாயகியாக வரும் அனுபமா பிரகாஷ், அழகு பதுமையாக வந்து சென்றிருக்கிறார்.

நண்பர்களாக நடித்திருப்பவர்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

யோகிபாபு, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.

இயக்கம் பிரிந்த காதலை நண்பர்கள் மூலம் சேர்த்து வைக்கும் கதை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கேசவன்.

மிக எளிமையான கதையை இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார்.

சிறு பட்ஜெட்டில் என்ன கொடுக்க முடியுமா அதை தரமாகவே கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். கதாபாத்திரங்களை கையாண்ட விதமும் சிறப்பு.

டேவிட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார்.

நவநீதனின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ ரசிப்பு.

6.2

Fair

Story - 7
Screenplay - 7
Direction - 6
Artist - 7
Music - 7
Cinematography - 7
Editing - 7
Stunt - 6
Dance - 7
Art - 7
- 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*