4 கதாநாயகிகளுடன் அதர்வா நடிக்கும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்

அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா தயாரிப்பில் அதர்வா மற்றும் 4 கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் திரைப்படம் “ ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் “. இத்திரைப்படம் அம்மா கிரியேஷனின்  சில்வர் ஜூபிலி திரைப்படமாகும்.

ஓடம் இளவரசு இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் , ரெஜினா கசான்றா , பிரணீதா , அதீதி போஹங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்த கதைக்கு நான்கு கதாநாயகிகள் தேவைப்பட்டதால் இப்படத்தில் நான்கு பேர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தை பொறுத்தவரை இவர்தான் கதாநாயகன் , இவர்தான் காமெடியன் , இவர் தான் ஹீரோயின் என்று எதுவும் கிடையாது. திரைக்கதையில் ஒவ்வொருவரின் பகுதியும் சுவாரசியமாக இருக்கும். ரொமண்டிக் – காமெடி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற அதர்வாவின் ஆசை இதன் மூலம் நிறைவேறி உள்ளது. முதன் முறையாக இப்படத்தில் அதர்வாவும் சூரியும் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களோடு இப்படத்தில் நான்கடவுள் ராஜேந்திரன் , T.சிவா , மயில்சாமி , சோனியா போஸ் வெங்கட் , பிக் பிரிண்ட் கார்த்திகேயன் ,தீனா , லோகேஷ் & கோபி , ஐஸ்வர்யா பழனி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களோடு சிறப்பு தோற்றத்தில் நேகாமாலிக் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – M. ஸ்ரீசரவணன்
இசை – D. இமான்
படத்தொகுப்பு – பிரவீன் K.L
பாடல்கள் – யுகபாரதி
நடனம் – தினேஷ்
சண்டை பயிற்சி –சிறுத்தை K கணேஷ்
கலை –வைரபாலன்
ஸ்டில்ஸ் – ஸ்டில்ஸ் ரவி
பி.ஆர்.ஓ – ஜான்சன்
காஸ்ட்யும் டிசைனர் – நித்யா , ரபி , நிரஞ்சினி அகத்தியன்
டிசைன் – பிரத்யூல்
கலரிஸ்ட் – M.ஷண்முகநாதன்
நிர்வாக தயாரிப்பு – திலீபன்.M , செங்கோட்டையன்
பரஞ்ஜோதி , துரைசாமி
லையன் புரட்யூசர் – “ பிக் பிரிண்ட் “ B. கார்த்திகேயன்
இணை தயாரிப்பு – ரகுநாதன்.P.S , R.சந்திர சேகர் , சரவணா குமார்
தயாரிப்பு – T.சிவா

Moive Photos:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*