Arya official statement on marriage to Sayyeshaa

Arya official statement on marriage to Sayyeshaa

Arya official statement on marriage to Sayyeshaa

சாயிஷாவுடனான திருமணம் குறித்து காதலர் தினத்தன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் ஆர்யா!

பொதுவாக திரையுலகில் உள்ள நடிகர் நடிகைகள் காதலிப்பதும் அதன் பிறகு அதெல்லாம் உண்மை இல்லை, நாங்கள் நண்பர்களாக பழகுகிறோம். இருவர் உள்ளன்போடு பழகினால் அதற்கு காதலிப்பதாகத்தான் அர்த்தமா? வேறு எந்த காரணங்களும் இல்லையா? என்றெல்லாம் கேட்டு சிலர் விலகி விடுவதும் உண்டு. விலகாமல் சேர்ந்து இருப்பதும் உண்டு.ஆனால் அதேநேரத்தில் காதலில் ஒன்றாக ஒன்று சேர்ந்தவர்களும் உள்ளனர். ஜோதிகா-சூர்யா, அஜித்-ஷாலினியைப் போல் மற்றொரு திரைத்துறை தம்பதிகளும் திருமண வாழ்வில் இணையவுள்ளனர். சினிமாவில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த ‘உள்ளம் கேட்குமே’ என்ற திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ஆர்யா. அதன்பிறகு பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ‘நான் கடவுள்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன், ‘அவன் இவன்’, ‘ராஜா ராணி’ ஆகிய படங்கள் அவருடைய நடிப்பில் வெளிவந்த முக்கியமான படங்கள். சாயிஷா 2015ல் தெலுங்கில் வெளி வந்த ‘அகில்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் 2017ல் வெளி வந்த ‘வனமகன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். ‘கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யா, சாயிஷா இருவரும் சேர்ந்து நடித்தனர். கடந்த சில வாரங்களாகவே இருவருக்கும் இடையில் காதல் எனப் பல செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன.தற்போது அந்த தங்கள் உண்மை என தெளிவாகி உள்ளது.

நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இருவருமே இன்று திருமணத்தை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வருகின்ற மார்ச் மாதம் திருமணம் செய்ய இருப்பதாக காதலர் தினமான இன்று அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*