கதைக்கரு:

அலட்சியத்தால் மூடப்படாது இந்தியாவில் இதுவரை 381 உயிர்களை பலி வாங்கிய ஆழ்துளை கிணறுகளும் ,கடமையை செய்யும் கலெக்டரும் அவர் சந்திக்கும் பிரச்சினைகளும் அவரது இறுதி முடிவும் தான் “அறம்” படக்கரு.

கதை : தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பதவியேற்ற கொஞ்ச நாளிலேயே சஸ்பென்ட் ஆகி விசாரணைக்கு உள்ளாகும் நயன்தாரா ., அந்த விசாரணை அதிகாரியிடம் நியாயத்திற்காக பாடுபட்ட தான் அநியாயமாக சஸ்பென்ட் ஆன கதையை விளக்குகிறார்.

ஒரு  கவுன்சிலரின் நிலத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை ., அரசியல்வாதிகள் , அரசு அதிகாரிகள் காட்டிய அலட்சியத்தை பொருட்படுத்தாது., மக்களுடன் சேர்ந்து , மனிதாபிமானத்துடன் போராடி மீட்ட மீட்கிறார், கலெக்டர்  மதிவாதினி.

கதையின் நாயகியாக , கலெக்டராக இப்படம் முழுக்க பவனி வரும் நயன்தாரா, நடிப்பினால்  ரசிகர்களை  சீட்டோடு கட்டிப்  போட்டு விடுகிறார்.  பட முடிவில்., “என் வேலை அரசியல்வாதிங்களை கன்வினியன்ஸ் பண்றதல்ல… மக்களுக்கு சேவை செய்யவே சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி இந்த பதவிக்கு வந்தேன். அப்படி வந்த இந்த பதவியால் மக்களுக்கு செய்ய முடியாத சேவையை எப்படி செய்யணும்னு எனக்குத் தெரியும் .” என “பன்ச் ” அடித்தபடி , விசாரணை அதிகாரி கிட்டியிடமிருந்து திமிராக எழுந்து போகும் காட்சி வரை நயன் நடிக்கவில்லை சகாயம் மாதிரி ஒரு நேர்மையான கலெக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.
படத்தில் குழியில் விழுந்த குழந்தையின் ஏழை தந்தை புலேந்திரனாக நடித்திருக்கும் ராம்ஸ் , தாய் சுமதியாக வரும் சுனுலஷ்மி , புலேந்திரனின் திறமை வாய்ந்த மகனாக வந்து சிறுமியை துளையில் இருந்து மீட்கும் ரமேஷ், சுமதி – சுனு லட்சுமியின் சகோதரர் ,விக்னேஷ் , துளையில் மாட்டிய சிறுமி தன்ஷிகா , அடாவடி எம்எல்ஏ -வேல ராமமூர்த்தி , அரசு அதிகாரி ஈ.ராமதாஸ் , விசாரணை அதிகாரி கிட்டி கிருஷ்ணமூர்த்தி , அமைச்சர் ‘அம்மா’ சிவா, ஜீவா ரவி , பழநி பட்டாளம் , உள்ளிட்ட அனைவரும் தங்கள் பாத்தித்தின்கணம் அறிந்து பக்காவாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர்.

தொழில்நுட்பகலைஞர்கள் : லால்குடி இளையராஜாவின ஆழ்துளை கிணறு செட்டப் உள்ளிட்ட தத்ரூப கலை இயக்கமாகட்டும் இருட்டிலும் மிரட்டலாக ஒளிரும் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவாகட்டும், பாடல்வரிகள் எளிதில் புரியவில்லை என்றாலும் ஜிப்ரானின் வசீகர இனிய இசை மற்றும் பின்னணி இசையாகட்டும் சகலமும் “அறம்” படத்திற்கு பக்கா பலம்!

இயக்கம் :  யாரும் தொடாத ஆழ் துளை கிணறு அஜாக்கிரதை மரணங்களை சமூக அக்கறையுடன் பிரித்து மேய்ந்து பாடமாக படம் பிடித்திருக்கும் பாங்கு பாராட்டிற்குரியது.மேலும் , அதற்கு பக்கா பலமாக “மக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டம் ஆக்கனும் … சட்டத்த போட்டுட்டு அதுக்குள் மக்களை அடக்கக்கூடாது.” என்பன உள்ளிட்ட நிதர்சன வசனங்கள் “அறம்” படத்திற்கு பெரும் வரம் எனலாம்.

8.1

Great

Story - 8
Screenplay - 8
Direction - 8
Artist - 8
Music - 8
Cinematography - 9
Editing - 8
Stunt - 8
Dance - 8
Art - 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*