ஆங்கரிலிருந்து ஆக்ட்ரஸ் ஆன ஜூலியானா.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் நாட்டில் பிரபலமானவர் ஜூலியானா. நர்ஸிங் படிப்பை முடித்த இவர் உலகையே திரும்பி பார்க்க வைத்த மெரினா போரட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானவர்.

பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதனையடுத்து ஜூலி மற்றொரு பிரபல சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். சமூக வலைத்தளங்களிலும், மைம் கிரியேட்டர்களாலும்  பிரபலமாகிய இவர், தற்போது ‘K7 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து ஜூலியிடம் கேட்டதற்கு, “இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. மேலும் இந்த படம் என் வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்” என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் டைட்டில், இயக்குனர் போன்ற விவரங்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*