நடிகர் மற்றும்இயக்குனர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா கதாநாயகனாக அறிமுகமாக,அவரது ஜோடியாக த்ரிஷா சாயலில் இருக்கும் ரேஷ்மா ரத்தோர் எனும் தெலுங்கு நடிகை தமிழில் அடியெடுத்து வைக்க ., ‘சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ‘ பேனரில் சிவரமேஷ்குமார் தயாரிப்பில் இன்பசேகர் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படமான “அதாகப்பட்டது மகாஜனங்களே” யில் எதிர்பாராத சூழவில் துப்பறிவாளனான ஒரு கிடாரிஸ்ட் கலைஞனின் காதலும் வாழ்க்கையும் காமெடியாகவும்,கலர்புல்லாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அறிமுகம் – உமாபதி ராமையா அவரது அப்பாவை உருவ, உயரத்தில் மிஞ்சி நிற்கிறார். நடிப்பு உயரத்திலும், நடன காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். கண்டிப்பாக ஒரு நல்ல எதிர்காலம் அவருக்கு காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.  உமாபதியின் ஜோடியாக ,த்ரிஷா சாயலில் இருக்கும் தெலுங்கு நடிகை ரேஷ்மா ரத்தோர் நடிப்பிலும் கிளாமரிலும ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருகிறார். நாயகரின் ‘காமெடி’ நண்பர் கருணாகரன் , அப்யா ஆர்.பாண்டியராஜன் , காமெடிவில்லன் மனோபாலா , நாயகியின் அப்பா ‘ஆடுகளம்’ நரேன் , போலீஸ் யோக்ஜேப்பி , மகனுக்காக ஒரே ஒரு ஷாட்டில் வரும் தம்பி ராமையா.. ஆகிய அனைவரும் ,அவர்களது நடிப்பும் ரசனை.

படத்தின் ஒளிப்பதிவாளருக்கு மிகப்பெரிய பாராட்டை கொடுத்தே ஆக வேண்டும். பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் விதமும் , தேர்வு செய்யப்பட்டிருக்கும் லொகேஷன்களும் அழகோ அழகு. விஜயகுமாரின்ஆடை வடிவமைப்பில் நாயகன் , நாயகி மட்டுமின்றி படத்தில் இடம்பெற்றிருக்கும் அத்தனை நட்சத்திரங்களும் அசத்தலாக அழகாக உள்ளனர்.

“அதாகப்பட்டது மகா ஜனங்களே” எனும் டைட்டிலும் , இப்படக்கதையை துப்பாறி வாளனாக களமிறங்கிய ஒரு கிடாரிஸ்ட் கலைஞனின் திக் திக் திக் அனுபவங்களோடு ரொம்பவே ‘லைட்டர்வேயில் நகைச்சுவையாக சொல்ல முற்பட்டிருக்கும் இயக்குநரின் துணிச்சலும் இத்திரைப்படத்திற்கு பெரும் பலம் .[/vc_column_text][/vc_column][/vc_row]

6.5

Fair

Story - 6
Screenplay - 6
Direction - 7
Music - 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*