கரு : துபாயில் டான் ஆன , மதுரை தாதாவின் கையாள்., தன் வாலிப வயது காலத்தில் . காதலியின் நன்மைக்காக ., விட்டுத் தந்தார் தன் காதலை. அதே நேரம், வயோதிக காலத்தில் தனக்கு ,வந்த மற்றொரு காதலை விட்டுத் தர மறுப்பதே இப்படக்கரு.

படத்தின் ஆரம்பத்திலே துபாயில் உளவுத்துறை அதிகாரியாக வேலைபார்க்கும் கஸ்தூரி மனத்திடம் யார் அந்த மைக்கல் என்ற விசாரணையுடன் படம் ஆரம்பிக்கிறது.ஆரம்பத்தில் மதுரை மைக்கல் ஆக வரும் சிம்பு காசுக்காக கொலை செய்யும் ஒரு தாதாவாக படத்தில் தோன்றுகிறார்.அதன்பின் ஸ்ரேயா மீது ஏற்படும் காதலால் ஒரு கட்டத்தில் இருவரும் துபாய் சென்று விடுவோம் என இருவரும் முடிவெடுக்க எதிர்பாராத விதமாக சிறைக்கு சென்று விடுகிறார் சிம்பு.அதன்பின் மகத் சிறையில் இருந்து சிம்புவை தப்பிக்க வைத்து ஸ்ரேயாவுடன் சேர்த்துவைக்க நினைக்கும்போது சிம்பு ஷ்ரேயா விட்டு பிரிந்து விடுகிறார்.அதன்பின் சிம்பு,மகத்,vtv கணேஷ் மூன்று பேறும் துபாய்க்கு சென்று விட அதன்பின் என்ன ஆனது என்பது படத்தின் இரண்டாம் பக்கத்தில் சொல்லவிருக்கிறாரா இயக்குனர்.அதேவேலைடயில் படத்தின் இரண்டாம் பாதியில் 55 வயது அஷ்வின் தாதாவாக வரும் சிம்பு தமன்னாவிடம் காதல் வயப்பட்ட ஒரு கட்டத்தில் தமன்னாவும் சிம்புவுடன் நெருக்குமாக பழகுகிறார் இறுதியில் தன்னைத்தான் தமன்னா காதலிக்கிறார் என்று நினைத்து கொண்டுருக்கும் சிம்புக்கு தமன்னா ஒரு அதிர்ச்சியை கொடுக்கிறார் அது என்னவென்றால் சிம்புவை போலவே தோற்றம் கொண்டுருக்கும் வேறு ஒருவரை தான் காதலிப்பதாக அறிமுகப்படுத்த ஆத்திரம் அடையும் சிம்பு அவரை கடத்தி அவர் இடத்திற்கு வருகிறார்.இறுதியில் என்ன என்பதை இரண்டாம் பாகத்தில் தொடரும் என படமும் நிறைவடைகிறது.

சிம்பு தனது கதாபாத்திரங்களின் தோற்றத்துக்காக சற்று உழைத்திருக்கிறார். ஸ்ரேயா 80களில் வாழும் மதுரை பெண்ணாக வாழ்ந்திருக்கிறார். தமன்னா வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து நடனமாடி ரசிக்க வைக்கிறார். படத்திற்கு மிகப் பெரிய பலம் யுவனின் பின்னனி இசை.

 

[/vc_column_text][/vc_column][/vc_row]

5.9

Average

Story - 6
Screenplay - 5.5
Direction - 6
Music - 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*