கிருஷ்ணன்பஞ்சு அவர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா !!!

பழம்பெரும் படத்தயாரிப்பாளர்களான கிருஷ்ணன்பஞ்சு அவர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

ப்ருத்விராஜ், பஞ்சு அவர்களின் மூத்தமகனான இவர் 40 ஆண்டுகளாக அமெரிக்காவின் புற்றுநோய் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். விழாவிற்கு வந்த அனைத்து சிறப்பு விருந்தினரையும் வரவேற்ற இவர், இது, எங்கள் தந்தையின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் என்று கூறினார்.
 
இயக்குநர் விக்ரமன், “கிருஷ்ணன்பஞ்சு அவர்கள் தமிழ் சினிமாவிற்கே பெருமை, புராண படங்கள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில், பராசக்தி மாதிரியான ஒரு படத்தை தைரியமாக வெளியிட்டு சாதனை படைத்தனர். அதுமட்டுமின்றி, இயக்குநர் என்றாலே ஈகோ கண்டிப்பாக இருக்கும். இயக்குநராக இருந்தாலும் இதை சொல்ல நான் வெட்கப்படவில்லை. அப்படியிருக்கையில், இருவரும் இத்தனை ஆண்டுகாலம் ஒற்றுமையாக இருந்து தமிழ் சினிமாவிற்கு வைர கிரீடம் சூட்டியிருக்கிறார்கள்.” என்றும் கூறினார்.
குட்டி பத்மினி பேசுகையில், “நடிப்பை வெளிகொண்டு வருவதில் பஞ்சு அவர்களை விட சிறந்த இயக்குநர் வேறு எவரும் இருக்க முடியாது. எனக்கு அறுபது வயதானாலும் குழந்தையும், தெய்வமும் படத்தைப் பற்றி இன்னும் எல்லோராலும் பேசப்படுவதற்கு காரணம் கிருஷ்ணன்பஞ்சு அவர்கள்தான்.” என்று கூறினார்.
AVM குமரன் அவர்கள், “நான் Line Producerஆக கிருஷ்ணன் பஞ்சுவிடம் பணியாற்றியிருக்கிறேன். என்னிடம் காட்சிகளை காண்பித்து அதைப் பற்றி என்னிடம் கருத்துக்களை கேட்டுதான் தேர்வு செய்வார். நிறை குறை எதுவாக இருந்தாலும் நான் அவரிடம் கூறிவிடுவேன். அதை அவர் ஒரே மாதிரியாகத்தான் எடுத்துக் கொள்வார். அதுமட்டுமல்லாமல் பஞ்சு அவர்கள் படப்பிடிப்புக்கு முதல்நாளே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து மறுநாள் எடுக்கப் போகும் காட்சிகளை பற்றி நன்றாக திட்டமிட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மேற்பார்வை செய்து விட்டுதான் படப்பிடிப்பு எடுக்க ஆரம்பிப்பார்.”என்று கூறினார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள், “இந்த ஆவணப்படம் ஒரு பொக்கிஷம் என்று கூறினார். எந்தவிதமான கதையாக இருந்தாலும் அதை நன்றாக செய்வதே அவர்களின் பலம்.மேலும் குடும்பத்தில் கணவன், மனைவி அன்யோன்யம் இருந்தால் தான் இவ்வளவு பெரிய சாதனைகளை செய்ய முடியும்.” என்று அவருக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசினார்.
சுபாஷ், பஞ்சு அவர்களின் இரண்டாவது மகன், “இத்தருணத்தில் நான் எனது தாய், தந்தையரை நினைவு கூர்கிறேன். அவர்கள் இங்கு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். மற்றும் இச்சமயத்தில் என் தாயாரை பற்றி கூறியே ஆக வேண்டும். எங்கள் தாயார் வீட்டையும் கவனித்துக் கொண்டு எங்கள் தந்தைக்கும் பக்கபலமாக இருந்தார். மேலும், AVM குடும்பத்தாருடன் படங்களை தாண்டி தனிப்பட்ட உறவு இருந்தது.” என்றும் கூறினார்.
இயக்குநர் P.வாசு அவர்கள், “நான் இயக்குநராக பேசுவதைவிட மாணவகனாக பேசவே ஆசைப்படுகிறேன். இன்று நான் இங்கு நிற்பதற்கு கிருஷ்ணன்பஞ்சு அவர்களை பார்த்து வளர்ந்ததே காரணம் என்றும், நான் படித்த படிப்பு சினிமா, என் கல்லூரி கிருஷ்ணன்பஞ்சு.” என்றும் அவர்களுக்கு பெருமை சேர்த்தார்.
நடிகர் சிவகுமார் பேசுகையில், 40 வருடங்களாக 4 தலைமுறையை வைத்து படம் எடுத்த கிருஷ்ணன்பஞ்சு அவர்களை பற்றி 2 மணி நேரத்தில் அழகாக கொடுத்த தனஞ்செயனை பாராட்டிப் பேசினார். மேலும் உயர்ந்த மனிதன் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்டார்.
நடிகர் சூர்யா பேசுகையில், “உலகில் உள்ள சினிமா படம் எடுக்கும் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போது நான் என்ன செய்தேன்? என்ற கேள்விதான் என்னுள் எழுகிறது. அதுமட்டுமின்றி, கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் மடியில் விளையாடி இருக்கிறேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்று தெரிவித்தார். மேலும், “அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும், நல்ல மனிதராக இருக்க வேண்டும் போன்ற சமுதாயத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை செய்ய வேண்டும்.” என்றும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*