தமிழ் சினிமாவில் பரபரப்பான த்ரில்லர் படங்கள் ஒரு டிரெண்டாக வந்து கொண்டிருக்கின்றன.  அவற்றில் சில படங்கள் மட்டுமே அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலைத் தூண்டும் அளவிலான திரைக்கதையில் அமைந்து ரசிக்க வைக்கின்றன.

‘7 நாட்கள்’ படத்தில் அப்படி ஒரு பரபரப்பு திரைக்கதையில் இருக்கிறது. இயக்குனர் கௌதம் 7 நாட்களில் ஒரு கொலை சம்பவத்தைப் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார்.

கோடீஸ்வரரான பிரபு தனது மகனுக்கு, அவரைவிடவும் பெரிய கோடீஸ்வரரின் பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்கிறார். 7 நாட்களில் திருமணம் செய்ய தேதி குறிக்கப்பட, பிரபுவின் மகனுடன் நெருங்கி பழகிய பெண்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். இக்கொலைக்கான காரணங்களை கண்டுபிடிக்கும் வகையில் திரைக்கதை நகர்கிறது. கொலைகள் செய்வது யார், என்ற கேள்விகளுக்கான பதிலை சஸ்பென்ஸாக சொல்லியிருக்கிறார்கள்.

’சிவலிங்கா’ படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் அசத்திய சக்தி, இந்த படத்தில் ரொம்ப கூலாக நடித்துள்ளார்.  ஹீரோயின் நிகிஷா பட்டேலுக்கு பெரிய வேலை ஏதும் இல்லை என்றாலும், கவர்ச்சியான நடிப்பிலும், அவரை கலாய்க்கும் பிளாக்கி என்ற நாய் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் சிரிப்பு வெடியாக உள்ளது.

சைபர் கிரைம் அதிகாரி வேடம் ஏற்றிருக்கும் கணேஷ் வெங்கட்ராம், காக்கி யூனிபார்ம் இல்லாமல், பெப்பர் ஷால்ட் ஹர் ஸ்டைலோடு, கோட் சூட்டில் ஸ்டைலாக இருப்பதோடு, தனது கதாபாத்திரத்தை ரசிகர்கள் மனதில் நிற்கும் விதத்தில் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார். பிரபு, எம்.எஸ்.பாஸ்கர் என்று மூத்த நடிகர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசைக்கு பாஸ் மார்க் போடலாம். எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக உள்ளது.

சஸ்பென்ஸ் திரில்லர் என்றால் படம் முழுவதுமே ஒரே இருட்டாகவும், அமைதியாகவும் இருக்கும் என்ற தேரியை மாற்றியமைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் படத்தையே கமர்ஷியலாக கொடுத்திருக்கும் இயக்குநர் கெளதம் வி.ஆர்-ன் முயற்ச்சியை பாராட்டியே ஆக வேண்டும்.

7.8

Good

Story - 8
Screenplay - 8
Direction - 7
Music - 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*