’60 வயது மாநிறம்’ விமர்சனம் !

வயதான காலத்தில் பெற்றோர்களை கவனிக்காமல் இருக்கும் இந்தக்கால இளைஞர்களுக்கு பாடம் சொல்லும் படம் தான் இந்த ’60 வயது மாநிறம்’.

60 வயது ஆனா நடிகர் பிரகாஷ்ராஜிக்கு அடிக்கடி ஞாபக மறதி வருகிறது. இதனால் அவரை ஹோம் ஒன்றில் சேர்த்து விட்டு வேலையே பிஸியாகி விடுகிறார் மகன் விக்ரம் பிரபு.

கொஞ்ச நாள் களைத்து ஹோமில் தந்தையை பார்க்க வருகிறவர் அவரைக் கூட்டிக்கொண்டு கடைக்கு செல்கிறார் .வெளியே வந்த இடத்தில் பிரகாஷ்ராஜ் காணாமல் போகிறார்.
தந்தையை தொலைத்து விட்ட மகன் அவரத் தேடி அலைகிறார். காணாமல் போன தந்தை திரும்பக் கிடைத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை .

பிரகாஷ்ராஜ் மகனாக விக்ரம்பிரபு. கேரக்டருக்கு என்ன தேவையை அதை அளவாக வெளிப்படுத்தி பணமே பிரதானம் என்று ஓடிக்கொண்டிருக்கும் இக்கால இளைஞர்களை குடும்ப உறவுகளும் முக்கியம் என்று யோசிக்க வைக்கிறது அவரின் கதாபாத்திரம் .

மருத்துவராக வரும் இந்துஜா அருமையா நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.

வில்லனாக வரும் நடிகர் சமுத்திரக்கனி வழக்கம் போல நியாயம், தர்மம் பார்க்கிறவராக இந்தப் படத்திலும் வருகிறார். அவரது கூட்டாளியாக வரும் ‘கலக்கப் போவது யாரு’ புகழ் சரத் சில இடங்களில் கண் கலங்க வைக்கிறார்.

‘இசைஞானி’ இளையராஜா இசையில் பாடல்கள் சந்தோசப்படுத்துகிறது. பின்னணி இசை பிரமாதம் .
இந்துஜாவிடம் பிரகாஷ்ராஜ் தன் காதலை சொல்கின்ற காட்சி நன்றாக இருக்கிறது.;

ஒவ்வொரு இளைஞர்களும் பார்க்க வேண்டிய படம் தன் இது.

6.7

Fair

Story - 8
Screenplay - 7
Direction - 7
Artist - 8
Music - 7
Cinematography - 7
Editing - 8
Stunt - 7
Dance - 8
Art - 7
- 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*