திருமண பந்த புனிதத்தின் அடையாளமான தெய்வீக காதலர்களுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்

சினிமா வாழ்வில் காதலின் தீபம் ஒன்றை ஏற்றி வைத்து நடித்திருந்தார் நமது சூப்பர ஸ்டார் ரஜினிகாந்த். அவரின் நிஜ வாழ்வு காதல் கதை ரொம்பவே சுவாரசியமானது. சூப்பர் ஸ்டாரின் மனைவியான லதா ரங்காச்சாரி எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவர். 1981 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் அவர்களை ஒரு பேட்டி எடுக்க சென்ற போது முதன் முதலில் சந்தித்தார் லதா. முதல் சந்திப்பிலேயே காதல் கொண்ட சூப்பர் ஸ்டார் பேட்டி நடந்து கொண்டிருந்த போதே ‘என்னை கல்யாணம் பன்னிகிறியா’ என்று கேட்டுள்ளார். அவர்கள் இருவரின் முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்தது. பின் லதா அவர்களை தன் குருநாதரான பால சந்தரிடம் அறிமுகம் செய்து வைத்தார் ரஜினி. அவர்களின் திருமணம் திருப்பதியில் வைத்து மிக எளிமையாக நடந்தது.

வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத தெய்வீக காதலில் கலந்து திருமணம் என்ற புனித பந்தத்தின் பெருமையை தன் ரசிகர்களுக்கும், இவ்வுலகத்திற்கும் வாழ்ந்து காட்டிய இந்த தெய்வீக காதலர்களின்  36-வது திருமண நாள் இன்று.

எங்கள் பாசமிகு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு எங்கள் சார்பாகவும், உலகின் அணைத்து ரசிகர்கள் சார்பாகவும் திருமண நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*