கதைக்கரு :

சிட்டுகுருவிகளின் அழிவுக்கு, செல்போன்களும் அதை பயன்படுத்தும் மனித குலமும் தான் காரணம். என செல்போன்களையும், மனித குலத்தையும், அழிக்க முற்படும் வில்லனை தடை செய்யப்பட்ட ரோபோவைக் கொண்டு அழிப்பதே “2.0” படக்கரு.

 

இன்றைய அறிவியல் உலகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு அதி பயங்கரமான பயமுறுத்தலுடன் கூடிய பேரழிவுக்குப்பின், அரசாங்கம், அறிவியல் அறிஞர்களின் உதவியை நாடி தீர்வு காண களம் இறங்குகிறது. இதில் டாக்டர் வசீகரன் இறந்து போன அக்ஷய் குமாரின் ஆரா எனப்படும் நெகடீவ்தாட்ஸ் தான் இதற்கெல்லாம் என்று கண்டுபிடிப்பதோடு, அக்ஷயும் 1996 க்குப் பிறகு சிட்டுக்குருவிகள் அழியக்காரணம் சட்டத்தின் கண்களில் மண்னை தூவிவிட்டு செயல்பட வைக்கப்படும் செல்போன் டவர்களின் கதிர்வீச்சு என்பதால் செல்போன்களையும், செல்போன் பயன்படுத்தும் மனிதர்களையும் அழித்து ஒழிக்க முற்படுகிறார் என்பதையும் கண்டுபிடிக்கிறார்.

டாக்டர் வசீகரனாகவும் வசீகரனால் வடிவமைக்கப்பட்ட சிட்டி யாகவும் ரஜினி தனது ஸ்டைலில் கலக்கியுள்ளார். டாக்டர் வசீகரனின் நைஸ் இன்டலிஜென்ட் அசிஸ்டென்ட் நிலாவாக எமி ஜாக்ஸன் தான் ஒரு நல்ல நடிகை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அதிலும், சிட்டி ரஜினி இழுத்த இழுப்புக்கு ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும் எமி ஜாக்சன்.

அக்ஷய் குமார், சிட்டுகுருவி உள்ளிட்ட பெரிய பறவை இனங்கள் மீது அவர் காட்டும் பாசத்திலாகட்டும், சண்டைகள் காட்சிகளாகட்டும் அசத்தலோ அசத்தல். சில காட்சிகளில் ரஜினியையே ஒவர்டேக் செய்து விடுகிறார் மனிதர்.

தொழில்நுட்பகலைஞர்கள்: இயக்குனர் எஸ்.ஷங்கர், எழுத்தாளர் பி.ஜெயமோகன், எழுத்துக்களில் உள்ள வசீகரம் காட்சிகளாகவும் கவர முற்பட்டுள்ளன. ஆண்டனியின் படத்தொகுப்பில் படத்தின் பிரமாண்டம் பிரேம் டூ பிரேம் தெரிகிறது. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் அதே ப்ரேம்கள் காட்சிக்கு காட்சி மிளிர்கின்றன. ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் மதன் கார்கியும், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரும் எழுதிய “ராஜாளி …”, “புலி நாங்கள்.. “, “எந்திரலோகத்து சுந்தரியே ….” உள்ளிட்ட பாடல்களும் அவை படமாக்கப்பட்டுள்ள விதமும் வசீகரம்.

பலம்: ஷங்கர், ரஜினி, ரஹ்மான் மூவருடன் படத்தில் காட்சிக்கு காட்சி இடம் பிடித்திருக்கும் பிரமாண்ட தொழில்நுட்பமும் பலம்.

 

9.2

Amazing

Story - 9
Screenplay - 9
Direction - 9
Artist - 9
Music - 10
Cinematography - 9
Editing - 10
Stunt - 9
Dance - 9
Art - 9
- 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*