தாதா சினிமாக்களில் தனித்து தெரியப்பட்ட படம் புதுப்பேட்டை!

தாதா சினிமாக்களில் தனித்து தெரியப்பட்ட படம் புதுப்பேட்டை!

தாதா சினிமாக்களில் தனித்து தெரியப்பட்ட படம் புதுப்பேட்டை!

தொடக்கத்தில் ஒருவனின் கையை வெட்டுவதற்க்காக பயப்படும் குமாரு, ‘கொக்கி குமாரு’ ஆன பிறகு ரெளடி வாழ்க்கையின் அனைத்து அதிகார சுகங்களையும் அனுபவிக்கிறான். அதிலும் அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைத்த பிறகு, தன்னை ஒரு குறுநில மன்னனாக உணரத் தொடங்குகிறான். தனக்கு விசுவாசமான நண்பனின் தங்கை திருமணத்துக்குத் தாலி எடுத்துக்கொடுக்க வந்தவன், தானே தாலி கட்டுகிறான். தன் சொந்த அப்பாவை உயிரோடு குழிதோண்டிப் புதைக்கிறான்.

படிப்படியாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு படிநிலைகளை எதார்த்தத்துடனும் கலையாளுமையுடனும் இயக்கியிருப்பார் செல்வராகவன். ‘இதுதான் நல்லது, இதுதான் கெட்டது’ என்ற கறுப்பு, வெள்ளை சூத்திரத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, வாழ்க்கையின் சிக்கலான பரிமாணங்களை அச்சு அசலாகப் ‘புதுப்பேட்டை’யில் கொண்டுவந்திருப்பார் இயக்குநர் செல்வராகவன்.

ஒரு கலைஞனாக, தனுஷ் தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட படம் ‘புதுப்பேட்டை’. ‘காதல் கொண்டேன்’ படத்திலேயே, ‘யார் இந்தச் சிறுவன்… இவ்வளவு அற்புதமாக நடிக்கிறானே?’ என்று தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்தவர் தனுஷ். ‘புதுப்பேட்டை’யிலோ நடிப்பின் உச்சத்தைத் தொட்டிருப்பார். முதன்முதலாக ரெளடிகளுடன் பழகும்போது தன் அம்மாவைப் பற்றி அவர்கள் கிண்டலாகப் பேசியதும் கலங்கி அழுவது, முதல் வன்முறை சம்பவத்தின்போது கைகள் நடுங்கிப் பதறுவது, பாலியல் தொழிலாளியான கிருஷ்ணவேணி (சினேகா)க்குப் பிறக்கும் குழந்தை தன் சாயலில்தான் இருக்கிறதா என்று முகத்தோடு முகம்வைத்துப் பார்ப்பது, தன் குழந்தை கடத்தப்பட்டவுடன் பதறித் துடிப்பது, குழந்தையைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு நகருவதற்கு மனமின்றி அகலும் காட்சி என தனுஷ் ‘கொக்கி குமாரு’ என்ற மனிதனின் ரத்த சரித்திரத்தை நிகழ்த்திக்காட்டியிருப்பார்.

‘புதுப்பேட்டை’ திரைப்படம், ஒரு ரெளடி எப்படி உருவாகிறான், அவர்களுக்கும் அரசியலுக்கும்,அரசியல் வாதிகளுக்கும் உள்ள தொடர்பு மற்றும் அவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொண்ட நிலை மாறி ரெளடிகள் அரசியலைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலை, ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கை… போன்றவற்றை ஆழமாக பல்வேறு பரிமாணங்களோடு சொன்ன படம் ‘புதுப்பேட்டை’ .

‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ என இயக்குனர் செல்வராகவனின் பல திரைப்படங்களைப் போல புதுப்பேட்டை’யிலும் நாயகன் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவன். சாதாரண ஒரு மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த குமாரின் தாயை, அப்பாவே கொன்றுவிடுகிறார். அதற்குப் பிறகு குமாரின் வாழ்க்கை திசை மாறுகிறது. கஞ்சா வியாபாரிகளுடன் சேர்ந்து வெட்டுக்குத்துப் பழகி ரௌடியாக ஆகிறான். ரௌடி அப்படினாலே அடைமொழியோடுதான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணத்தின்படி குமாரு, ‘கொக்கி குமாரு’ ஆகிறான்.

 

 

புதுப்பேட்டை… தவிர்க்க முடியாத தமிழ் சினிமா!,ஏன்?
2006-ம் ஆண்டில் தமிழ் வருடத்துக்கு என்ன பெயர் எனத் தெரியவில்லை. ஆனால், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ‘தாதா ஆண்டு’ எனக் குறிப்பிடலாம். `பட்டியல்’, `ஆச்சார்யா’, `புதுப்பேட்டை’, `டான்சேரா’, `சித்திரம் பேசுதடி’, `தலைநகரம்’, `தூத்துக்குடி’ என ஏராளமான தாதா சினிமாக்கள் உருவாகின. இப்படி ஒரே நேரத்தில் பல தாதா படங்கள் வந்ததாலேயே சில படங்களைத் தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. 2006 ஆண்டு மே 26-ம் தேதி வெளியான ‘புதுப்பேட்டை’ படமும் பெரிய வெற்றி அடையவில்லை. ஆனால், தாதா சினிமாக்களில் தனித்துத் தெரிந்த படம். படம் வெளியான காலத்தைவிட பின்னாளில் அதிகம் பேசப்பட்ட சினிமா ‘புதுப்பேட்டை.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*