100 திரைவிமர்சனம்

தீயவர்களையோ, சமூக விரோதிகளையோ அடித்து உதைத்து அவர்களைச் சிறையில் அடைத்து, நேர்மையான காவல்துறை அதிகாரியாக மிளிர வேண்டுமென்பது அதர்வாவின் லட்சியம். ஆனால், அவசர உதவி கோரி எண் 100-இற்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்கும் கண்காணிப்பு அறையில் அவரைப் பணிக்கு அமர்த்திவிடுகின்றனர்.

அதர்வாவின் தந்தையாக பருத்தி வீரன் சரவணன், அம்மாவாக நிரோஷா, காதலியாக ஹன்சிகா, நண்பராக ‘எருமை சாணி’ விஜய் ஆகியோர் நடித்துள்ளனர் . தயாரிப்பாளரான ஆரா சினிமாஸ் மகேஷ், அன்வர் எனும் பாத்திரத்தில் அதர்வாவின் நண்பராக நடித்துள்ளனர். ஓர் அழகான பாத்திரத்திற்கு, மறைந்த நடிகர் சீனு மோகனின் கதாபாத்திர நடிப்பு ரசிக்க வைக்கிறது.

யோகி பாபுவின் வருகைக்குப் பின்பே படம் கலகலப்பாகிறது. இப்படத்தில் கிடைத்த வாய்ப்பை அற்புதமாய்ப் பயன்படுத்தியுள்ளார். விஷால் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது வந்துவிடும் ராதாரவியைக் கலாய்ப்பது என டைமிங்கில் வயிற்றைப் பதம் பார்க்கிறார். இதுவரை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்காத ஒரு நாயகனைத்தான் நடிக்கவேண்டுமென, இயக்குநர் அதர்வாவை நடிக்க வைத்துள்ளார். அதர்வா அவரது தேர்வு மிகச் சரியானது என்பதை தன் நடிப்பால் நிரூபித்துள்ளார். ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார் .

அதர்வாவிற்கு வரும் 100வது அழைப்பு தான் படத்தின் மையக்கரு. இடைவேளையின் பொழுதுதான் கதைக்குள் செல்கிறது படம். சில விஷயங்கள் பார்வையாளர்களுக்குப் புரிந்து விடாதோ என வசனங்கள் மூலம் விளக்குகிறார் இயக்குநர் சாம் ஆண்டன்.

Good

  • Dialouges
  • Comedy

Bad

  • Lag in Screenplay
6.3

Fair

Story - 7
Screenplay - 7
Direction - 7
Artist - 7
Music - 6
Cinematography - 7
Editing - 7
Stunt - 7
Dance - 7
Art - 8
- 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*