ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து மிரட்டும் மெர்சல்.

தளபதி விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் டீசர் நேற்று மாலை யூடியூபில் வெளியானது. வெளியான 1 நிமிடத்திலேயே 1k லைக்ஸ்களை குவித்து மிரட்டியது. சமூக வலைத்தளங்களில் தீயாக பரவிய மெர்சல் டீசருக்கு விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல், பல திரையுலக பிரபலங்களும், ஊடக பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வந்தனர். மெர்சல் வெளியான சில மணி நேரங்களிலேயே தனது சாதனைகளை பட்டியலிட ஆரம்பித்தது. இந்தியாவிலே அதிவிரைவில் 5 லட்சம் லைக்ஸ்களை பெற்ற முதல் டீசர், தளபதியின் மெர்சல் டீசர் தான்.

மேலும் வெளியான 4 மணி நேரத்திற்குள் 30 லட்சம் பார்வையாளர்களையும் 6 லட்சம் லைக்குகளை பெற்ற முதல் டீசர் என்ற உலக சாதனையை படைத்தது. 12 மணி நேரத்திற்குள் 8.4 மில்லியன் பார்வைகளுடன் 7 லட்சம் லைக்குகளை எட்டியிருந்தது. தற்போது 1 கோடி பார்வையாளர்களை கடந்து இதற்கு முன் இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்து வரலாறுகாணாத புதிய சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம் வெளியான 24 மணி நேரத்திற்குள 1 கோடி பார்வையாளர்களை கடந்த முதல் டீசர் என்ற பெருமையை எட்டியுள்ளது

 

Mersal Teaser:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*