விவசாயிகளுக்காக நடக்கும் போராட்டத்திற்கு நடிகர் சங்கம் ஆதரவு.

விவசாயிகளுக்கு ஆதரவாக வருகின்ற 25-ம் தேதி நடக்கும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டத்திற்க்கு நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. 
விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ம் தேதி செவ்வாய் கிழமையன்று அனைத்து கட்சிகள் சார்பில்  மாநிலம் தழுவிய அடையாள போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களது ஆதரவை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது
” பல வருடங்களாக இயற்கையாலும்,காவிரி பிரச்சனையாலும் தொடர்ச்சியாக ஏமாற்றபட்டு வரும் தமிழக விவசாயிகள் ,அரசிடம் வாங்கிய கடனை கட்ட முடியாமல், பலரும் தற்கொலை முடிவை நாடி வருகின்றது வேதனை அளிக்கிறது.  விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டியது மத்திய – மாநில அரசுகளின் கடமையாகும். அதை வலியுறுத்தி வருகிற 25-ம் தேதி அனைத்து கட்சிகள் நடத்தும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டத்திற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது முழு ஆதரவையும் தெரிவித்து கொள்கிறது “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*