விஜயா மருத்துவமனை பற்றிய தகவல் :-

விஜயா மருத்துவமனை பற்றிய தகவல் :-

உடல் உறுப்பு தானம் சார்ந்த மிக முக்கியமான பிரச்சனை சமந்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு மூத்த மருத்துவர்களான டாக்டர். சி. சின்னசாமி , டாக்டர் ரங்கநாதன் ஜோதி ,டாக்டர் ஜெ.அமலோபவநாதன் , டாக்டர். எஸ்.எஸ்.கே.ஐயர் , டாக்டர்.தீபக் அர்ஜுன் தாஸ் , மற்றும் டாக்டர். சுரேஷ் குமார் ஆகியோரின் முன்னிலையில் வைத்து இன்று நடைபெற்றது.

நமது அரசாங்கம் உடல் உறுப்பு தானத்தை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பான முயற்சிகளை எடுத்து வருகிறது. விஜயா மருத்துவமனை உடல் உறுப்பு தானம் சார்ந்த விழிப்புணர்வுக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வருகிறது. இன்று நாங்கள் பல்வேறு உடல் உறுப்புகளை 7 நாட்களில் உடல் மாற்றம் செய்துள்ளோம்.

எங்கள் மருத்துவமனையில் இருந்து எடுத்து செல்லப்பட்ட அந்த உடல் உறுப்புகள் நகரத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருபவர்களுக்கு மறுவாழ்வு தந்துள்ளது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு அரசாங்கம் மற்றும் என்.ஜி.ஒக்களோடு நாங்கள் இணைந்து மக்களிடையே உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மட்டுமே தான்.

விஜயா மருத்துவமனை பற்றிய தகவல் :-

விஜயா மருத்துவ மற்றும் கல்வி அறகட்டளையினுடைய விஜயா மருத்துவமனை மற்றும் விஜயா ஹெல்த் கேர் செண்டர் , விஜயா இருதய மற்றும் கண் மருத்துவமனை மிகச்சிறந்த ஒன்றாகும். விஜயா குழுமம் ஒருவரின் கனவுகளை மற்றும் ஆசைகளை நினைவாக்கும் ஒரு குழுமமாகும். இதை நிறுவியவர் மாபெரும் மனிதரான திரு. நாகிரெட்டி ஆவார். அவர் ஜாதி , மதம் , மொழி ஆகிய அனைத்தையும் தாண்டி அனைத்து தரப்பு மக்களுக்கும் மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவம் கிடைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இதை நிறுவினார். எங்களுடைய கனவை நினைவாக்கும் வகையில் 1972 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் மருத்துவம் செய்து குணப்படுத்தியுள்ளோம். எங்கள் மருத்துமனை NABH மற்றும் NABL ஆகிய தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.

650 பெட்டுகளுடன் , 1500 ஹெல்த் கேர் குழுவினருடன் மிகச்சிறந்த தரத்தில் விஜயா மருத்துவமனை இயங்கி வருகிறது. விஜயா மருத்துவமனையில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளது. இங்கே அவசர சிகிச்சைக்கென தனியாக 150 பெட்டுகள் உள்ளன.

விஜயா மருத்துவமனை மிக குறைந்த கட்டணத்தில் , மிகச்சிறந்த தரமான மருத்துவத்தை வழங்கி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*