ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘கால பைரவா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்கும்ம் ராகவா லாரன்ஸ் நாயகனாகவும் நடிக்கிறார்.
‘காஞ்சனா 2’ படத்திற்குப் பிறகு தற்போது ‘காஞ்சனா 3’ படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமன், தேவதர்ஷினி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்தப் படம் வெளி வந்த பிறகு தனது அடுத்த படமாக ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ‘கால பைரவா’ படத்தின் வேலைகளைத் தொடங்குகிறார். இப்படத்தை இயக்குவதோடு லாரன்ஸ் நாயகனாகவும் நடிக்கிறார்.