பிப். 21ல் கட்சி பெயரை அறிவிக்கிறார் கமல்

பிப். 21ல் கட்சி பெயரை அறிவிக்கிறார் கமல்

பிப். 21ல் கட்சி பெயரை அறிவிக்கிறார் கமல்

நடிகர் கமல்ஷாசன்ன் தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும், அதுகுறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சமீபகாலமாக தெரிவித்து வந்தார். இதுகுறித்து, இந்தியாவில் இருக்கும் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனைகளைக் கேட்டறிந்தார். மேலும், சமூகவலைதளங்களில் தீவிரமாக தனது அரசியல் கருத்துகளையும், அரசியல் விமர்சனங்களையும் பதிவிட்டு வந்தார். அவரது நெருங்கிய நண்பர் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், கமலும் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

வரும் பிப்ரவரி 21 அன்று ராமநாதபுரத்தில் தனிக்கட்சியின் பெயரை அறிவித்து, அரசியல் பயணத்தையும் தொடங்க இருக்கிறேன். என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்திற்கு நான் நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. ஆரம்பகட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரன், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளவுள்ளேன். இது நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்த சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல், எனக்கான கல்வி என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*