பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி – இசைஞானி இளையராஜா!

பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி - இசைஞானி இளையராஜா!

பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி – இசைஞானி இளையராஜா!

தமிழக மக்களுக்கு கவுரவம் .பத்ம விபூஷண் விருது குறித்து இளையராஜா கருத்து

மத்திய அரசு என்னை கவுரவிப்பதாக நினைக்கவில்லை. தமிழகத்தையும், தமிழக மக்களையும் கவுரவித்திருப்பதாக கருதுகிறேன் என்று பத்ம விபூஷண் விருது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

மத்திய அரசின் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இசைத் துறை சாதனைக்காக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இளையராஜா பேசியதாவது:

மத்திய அரசின் செய்தித் தொடர்புத் துறை அலுவலகத்தில் இருந்து பத்ம விபூஷண் விருது கொடுப்பதற்கான ஒப்புதலுக்காக கேட்டனர். ஒப்புதல் தெரிவித்ததோடு, நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறேன் என்று தெரிவித்தேன். அப்போது செய்தி தொடர்புத் துறையைச் சேர்ந்த இணைச் செயலாளர், ‘இந்த விருதுக்கு இதன் மூலம் கவுரவம் அடைகிறது’ என்றார்.

இதன் வாயிலாக மக்கள் என் மீது எந்த அளவுக்கு மதிப்பு வைத்திருக்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது. மத்திய அரசு என்னை கவுரவிப்பதாக நினைக்கவில்லை. தமிழகத்தையும், தமிழக மக்களையும் கவுரவித்திருப்பதாக கருதுகிறேன்.
என  இளையராஜா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*