படிப்பது கடமை ; சாதிப்பது தான் பெருமை -வில் அம்பு திரைப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி !

படிப்பது கடமை ; சாதிப்பது தான் பெருமை -வில் அம்பு திரைப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி !

தனி ஒருவனில் இருந்து நீக்கப்பட்ட வசனத்தை பேசி கவனம் ஈர்த்த ஜெயம் ரவி !
படிப்பது கடமை ; சாதிப்பது தான் பெருமை -வில் அம்பு திரைப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி !
வில் அம்பு திரைப்படத்தின்  சிங்கிள் ட்ராக் பாடல் வெளியீட்டு விழா இன்று லயோலா இன்ஜினீயரிங் கல்லூரியில் நடந்து  வரும் இன்ஜினியா கலை விழாவில் நடந்தது. இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர்கள்  திரு. சுசீந்திரன் , தாய் சரவணன் , இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் , படத்தின் நாயகர்கள் ஸ்ரீ , ஹரிஷ் கல்யாண் நாயகி ஸ்ருஷ்டி டாங்கே இசையமைப்பாளர் நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர் . இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடலை வெளியிட்டார் நடிகர் ஜெயம் ரவி.
முதலாவதாக படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் சுசீந்திரன் தங்கள் படக்குழுவை அறிமுகம் செய்துவைத்தார்.அதன்பின் படக்குழுவினர் எல்லோரும் ஒவ்வொருவராக பேசினர் , படத்தின் நாயகர்களுள் ஒருவரான ஹரிஷ் கல்யான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை நான் பெரிதாக கருதுகிறேன் .நானும் இந்த லயோலா கல்லூரியில் மாணவனாக சேர்ந்து படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. இந்த கல்லூரியில் சேர வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் ஆனால் எனக்கு இங்கு சேர வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று உங்களோடு இங்க நான் நடித்திருக்கும் படத்தின் சிங்கிள் பாடல் வெளியிடுவதில் மகிழ்ச்சி என்றார்…. நடிகர் ஸ்ரீ பேசியதாவது ; எனக்கு எப்போதும் வித்தியாசமான கதைகளில் தான் நடிக்க பிடிக்கும் , இந்த படத்தில் நான் ஏற்று நடித்திருக்கும் கதாப்பாத்திரம் முற்றிலும் புதுமையானது , நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் அது பிடிக்கும் என்று கூறினார்……. படத்தின் இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் பேசியதாவது , என் பதினான்கு வருட நண்பன் சுசீந்திரன் தயாரிப்பில் இந்த படத்தை இயக்கி இருப்பது மகிழ்ச்சி என்றார்.
அடுத்ததாக நடிகர் ஜெயம் ரவி “வில் அம்பு”  படத்துக்காக  இசையமைப்பாளர் நவீன் இசையில் இசையமைப்பாளர் டி.இமான் பாடியுள்ள “வில் அம்பு” படத்தின் சிங்கள் டிராக் பாடலான ” நீயும் அடி நானும்” பாடலை வெளியிட்டு பேசினார். நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது ; நானும் சில வருடங்களுக்கு முன்பு இந்த கல்லூரியில் மாணவனாக படித்துள்ளேன் , இதே பெட்ரம் ஹாலில் நிறைய நிகழ்ச்சியில் நான் என்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளேன். இப்போது நான் உங்கள் சீனியராக இங்கே நிற்கிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது . உங்களிடம் நிறைய பேசலாம் என்று தான் வந்தேன் ஆனால் உங்கள் ஆரவாரத்தை பார்த்தவுடன் எனக்கு என்ன பேச வந்தோம் என்றே மறந்துவிட்டது. நம்முடைய வாழ்க்கையில் இரண்டு முறை மகிழ்ச்சியான தருணம் வரும் ஒன்று நாம் பிறக்கும் போது நம்மை சார்ந்தவர்களுக்கும் மற்றொன்று நாம் எதற்காக பிறந்தோம் என்று நாம் அறியும் போதும் வரும் . உங்களை போல் இங்கே அமர்ந்து நானும் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறேன் , நாம் கல்லூரிக்கு வந்து படிப்பில் சாதனை படைப்பது பெரிய விஷயமல்ல படிப்பது நம்முடைய கடமை. அதை தாண்டி நாம் என்ன சாதித்தோம் என்பது தான் நமக்கு பெருமை . தனி ஒரு படத்தில் இருந்து நீக்க பட்ட வசனம் ஒன்று உண்டு ; ஒரு போலீஸ்காரர் என்னிடம் நான் காவல் துறைக்கு உண்மையாக இருக்கிறேன் என்பார்
பதிலுக்கு நான் ” கடமைக்கு உண்மையாக இருப்பது உங்கள் கடமை ; நீங்கள் சாதிப்பது தான் உங்களுக்கு பெருமை.
இயக்குநர் சுசீந்திரனை போல் நட்புக்கு பெரிய மரியாதை கொடுப்பவன் நான். இந்த படத்தின் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் , படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் சுசீந்திரனின் நெருங்கிய நண்பர் , இருவரும் பதினான்கு வருடங்களாக ஒரே அறையில் தங்கி இருந்தனர். அந்த நட்பை மறக்காமல் இயக்குநர் சுசீந்திரன் தன்  நண்பனுக்காக இந்த படத்தை தயாரித்துள்ளார். இதை போன்ற நட்பை நீங்கள் அனைவரும் கல்லூரி காலத்தில் தவறவிட்டுவிட கூடாது. இயக்குனர் சுசீந்திரனின் மேல் உள்ள மரியாதையின் காரணமாக தான் நான் இந்த விழாவுக்கு வருகை தந்தேன்.
இந்த படத்தில் நடித்துள்ள ஸ்ரீயின் நடிப்பை ஓநாயும் ஆட்டுகுட்டியும் படத்தில் நான் நிறைய ரசித்தேன். அவருக்கு வாழ்த்துக்கள். படத்துக்கு இசையமைத்துள்ள நவீன் பாடல்கள் அருமையாக உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல்களை பெயர்பெற்ற இசையமைப்பாளர்களை கொண்டு உருவாக்கியுள்ளார் நவீன். இது ஒரு நல்ல முயற்சி. இதை போன்ற முயற்ச்சிகள் நிச்சயம் வெற்றி பெரும் என்று வாழ்த்தினார் நடிகர் ஜெயம் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*