டிகர் தம்பி ராமையா அவர்களுடைய மகன் உமாபதி தான் இப்படத்தின் கதாநாயகன்

டிகர் தம்பி ராமையா அவர்களுடைய மகன் உமாபதி தான் இப்படத்தின் கதாநாயகன்

அதாகபட்டது மகா ஜனங்களே திரைப்படத்தின் இயக்குநர் இன்பசேகரன் பேசியது :- எனக்கு பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும் என யாரெல்லாம் சொல்லுவார்களோ அவர்கள் அனைவருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் பிடிக்கும். இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவு நான்கு பாடல்களாக வெளிவந்துள்ளது.இப்படத்துக்கு அவர் கூடுதலாக ஒரு பாடலை வழங்கியுள்ளார். அப்பாடல் ஆல்பத்தில் மட்டும் இடம்பெறும். இப்படம் காமெடி கலந்த த்ரில்லர் படமாகும். நடிப்பில் வெவ்வேறு பரிமாணங்களை காட்டி வரும் நடிகர் தம்பி ராமையா அவர்களுடைய மகன் உமாபதி தான் இப்படத்தின் கதாநாயகன். எல்லோருக்கும் சில விஷயங்கள் அமையும் என்று கூறுவார்கள் அதே போல் எனக்கு கதைக்கு ஏற்ற கதாநாயகனை தேடும் போது உமாபதி அமைந்தார். இக்கதைக்கு புதுமுக கதாநாயகன் தான் தேவைபட்டார். அதே போல் நாம் தினம்தோறும் அக்கம்பக்கத்தில் பார்க்கும் முகம் போல் இருக்க வேண்டும் நான் தேடி வந்த போது சரியான தேர்வாக அவர் அமைந்தார். படத்தின் கதாநாயகி ரேஷ்மா ரதோர் இவர் தெலுங்குவில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். தமிழில் நாங்கள் தான் அவரை அறிமுகம் செய்கிறோம். படத்தில் அவர் கதாநாயகியாக அல்லாமல் கதையின் நாயகியாக இருப்பார். கதைக்கு பொருத்தமான ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தில் மனோபாலா , பாண்டியராஜன் , நரேன் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் முழுவதும் கதாநாயகனோடு பயணமாகும் ஒரு கதாபாத்திரத்தில் கருணா நடித்துள்ளார். படத்துக்கு ஒளிப்பதிவு பி.கே.வர்மா. படத்தொகுப்பு ஏ.எல்.ரமேஷ் இவர் அப்பா , நாடோடிகள் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர் தம்பி ராமையாவின் மகன் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தில் தம்பி ராமையாவின் பங்கு என்ன என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கும். அதற்கு பதில் இதுவரை யாரும் பார்காத தம்பி ராமையாவை இப்படத்தில் பார்க்கலாம் என்று இயக்குநர் இன்ப சேகரன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*