உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள மாயா திரைப்படம்

உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள மாயா திரைப்படம்

போடன்சியல் ஸ்டுடியோ சார்பில் எஸ்.ஆர் பிரபு அவர்கள் தயாரித்து அஷ்வின் சரவணன் இயக்கி வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாயா”. சூப்பர் நச்சுரல் படமான இதில் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் ஆரி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார். படத்துக்கு இசை:-ரோன் ஏதன் யோகன் ;கேமரா :- சத்யன் சூர்யன், படத்தொகுப்பு:- சுரேஷ், ஆர்ட்:- தா.ராமலிங்கம் ; காஸ்ட்யும் டிசைன்:- வாசுகி பாஸ்கர்.

படத்தை பற்றி இயக்குநர் அஷ்வின் சரவணன் பேசும் போது கூறியவை ; நான் இந்த படத்தின் கதையை எழுதும் போது என் மனதில் யாரையும் வைத்து எழுதவில்லை அதற்க்கு காரணம் என்னவென்றால் யாரையாவது நினைத்து நான் கதை எழுதி அவர்கள் படத்தில் நடிக்க இயலாமல் போனால் என்னால் அதில் இருந்து வெளியே வர முடியாது. படத்தின் தயாரிப்பாளர் கதை கேட்டவுடன் இந்த கதையில் முக்கிய பாத்திரமாக வரும் அந்த சிங்கள் மதர் கதாபாத்திரத்தில் நன்கு தெரிந்த முகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைத்தார். உடனேயே எங்கள் மனதுக்கு நயன்தாரா அவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது, உடனே தயாரிப்பாளர் நயன்தாரா அவர்களிடம் பேசி என்னை கதை சொல்ல அனுப்பி வைத்தார். நயன்தாராவிடம் கதை சொல்ல எனக்குள் சின்ன பயம் இருந்தது. நான் கதையை சொல்லி முடித்ததும் அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. கண்டிப்பாக படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். இந்த படத்தை படமாக்க மொத்த குழுவும் ஒரு வருடம் கடுமையாக வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்தாமல் உழைத்தது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். நான் ஒரு வருடம் அவர்கள் எல்லோரையும் அதிக அளவில் தொல்லை  செய்துவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். அதை பொறுத்து கொண்டு ஒரு வருடம் அவர்கள் முழு சுதந்திரத்தோடு கடுமையாக உழைத்து படத்தை உருவாக்கி உள்ளனர். முக்கியமாக படத்தின் கேமரா மேன் சத்யா படத்தை லோ லைட்டில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக மிக தத்ருபமாக படம்பிடித்துள்ளார். படத்தில் ஆரி அவர்கள் ஓவியராக நடித்துள்ளார். அவர் பிரபலமான  பத்ரிக்கைகளுக்கு ஓவியம் வரையும் நபராக வருகிறார். அவர் வரையும் ஓவியங்களில் இருந்து தான் கதையின் ஒவ்வொரு முடிச்சும் அவிழும். இந்த படத்தில் நிறைய ஓவியம் சார்ந்த கதை சொல்லல் இருக்கும். இந்த படத்தின் சவுண்ட் டிசைன் பெரிய அளவில் பேசப்படும். நயன்தாராவுக்கு இந்த படத்துக்கு ஏற்றவாறு மேகப் போடப்பட்டுள்ளது.

படத்தை பற்றி நடிகர் ஆரி பேசும் போது ; இந்த படத்தில் முதலில் நடிகர் நாணி அவர்கள் நடிப்பதாக தான் இருந்தது. பின்னர் சில காரணங்களால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. நான் இந்த கதையை கேட்டதும் நீங்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கி கொண்டு நடிக்கிறேன் என்று கூறிவிட்டேன் அதற்க்கு காரணம் படத்தின் கதை. சில படங்களில் தான் படத்தில் நடிக்கும் எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும் , அந்த சில படங்களை போல் இந்த படத்திலும் எல்லோருக்கும் முக்கியம்துவம் இருக்கும். படத்தை வெளியிடும் ஸ்ரீ தேன் ஆண்டாள் பிலிம்ஸ் திரு.முரளி சார் நான் வெளியிட்ட பேய் படங்களிலேயே சிறந்த படம் இது தான் என்று கூறியுள்ளார். முதன் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் ட்ரைலர்  உலக அளவில் ஆங்கிகாரம் பெற்றுள்ளது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

மாயா திரைப்படம் வருகிற செப்டெம்பர் பதினேழாம் தேதி வெளிவரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*