இராமேஸ்வரத்தில் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்குகிறார் நடிகர் கமல்ஹாசன் !

இராமேஸ்வரத்தில் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்குகிறார் நடிகர் கமல்ஹாசன் !

இராமேஸ்வரத்தில் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை  தொடங்குகிறார் நடிகர் கமல்ஹாசன் !

நடிகர் கமல் ஜனவரி 16ம் தேதி நள்ளிரவில் தன் அரசியல் பயணத்தினை பிப் 21ம் தேதி தொடங்குகிறேன் என அறிவிப்பை வெளியிட்டார். அவர் பிறந்த இராமநாதபுரத்தில் கட்சியின் பெயரை கூறயிருக்கிறார்.

தொடக்கக்கட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்று தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் வரும் 21ம் தேதி தனது அரசியல் பயணத்தினை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவித்துள்ள விளக்கத்தில்,அப்துல் கலாமிற்கு பல கனவுகள் இருந்தன. அவரை போன்று பல கனவுகள் கொண்டவன் நான். விமர்சிப்பது மட்டும் எனது வேலையன்று. நான் இறங்கி வேலை செய்ய வந்தவன் எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல்ல. அது நாடு தழுவியது. மிகப்பெரிய சரித்திரமும், ஆந்த்ரோபாலஜியும் தொல்பொருள் ஆராய்ச்சியும் திராவிடத்தில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*