இயக்குனர் தனுஷை பாராட்டிய தங்கர்பச்சான்.

தேசிய விருது பெற்ற நடிகர், தனுஷ் அவர்கள் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் படம் ப.பாண்டி. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என ஆல்ரவுண்டராக களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார் தனுஷ். இப்படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் தனுஷிற்கு தன் பாரட்டுகளை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது,

ராஜ்கிரண் முதன்மை பாத்திரத்தில் நடித்து  நடிகர் தனுஷ் இயக்கியிருக்கும் ப.பாண்டி திரைப்படத்தை பார்த்தேன். நெடுநாளைக்குப்பின் ஒரு பொழுது போக்கு திரைப்படம் படம் பார்ப்பவர்கள் அனைவரின் உணர்வையும் தொட்டுப்பார்த்து விட்டு சென்றிருக்கிறது.

ஒரு தகப்பனின் உணர்வையும்,அவர் மூலம் படம் பார்ப்பவர்களின் குற்றவுணர்வையும் வெளிக்கொண்டு வந்திருக்கும் இந்தப்படம் தமிழ் சினிமா இதுவரைப்பேசாத சில பகுதிகளை பேசியிருக்கிறது.

அறிவியல் தொழில்நுட்பம் மனித உறவுகளிடம் நேர்முக உரையாடலையும்,சந்திப்பையும் முறித்துக்கொண்டு வரும் காலத்தில் தகப்பனின் மனதை ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் கடத்தி உறவை பலப்படுத்தியிருக்கிறது.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் திரையரங்கு சென்று பார்க்க ஒரு திரைப்படம் ப.பாண்டி. படம் பார்த்த ஒவ்வொருவரும் அதன்பின் தங்களுக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர்வார்கள். ஒவ்வொருவரும்  தவறாமல் அவரவர் குழந்தைகளுக்கும்,பெற்றோர்களுக்கும் தவறாமல் காண்பியுங்கள்.

எப்பொழுதுமே உணர்வுகளுக்குப்பின்தான் தொழில்நுட்பம் என்பதை இந்தப்படமும் உணர்த்துகிறது. தனுஷின் இந்த முயற்சியை படம் பார்த்த அனைவரையும்போல் நானும் பாராட்டி மகிழ்கிறேன்.

அன்போடு  தங்கர் பச்சான்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*