இதற்க்கு மேலும் நான் பொறுமையாக மாட்டேன்; நான் வாய் திறந்து பேச போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை – சரத்குமார்

இதற்க்கு மேலும் நான் பொறுமையாக மாட்டேன்; நான் வாய் திறந்து பேச போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை – சரத்குமார்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு  நடிகர் சங்க தலைவர் சரத் குமார் தலைமையிலான அணியின் ஆலோசனை கூட்டம் மற்றும்  பத்திரிக்கையாளர் சந்திப்பு  நடைப்பெற்றது. இதில் நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் சரத்குமார் நடிகர்கள் விஜயகுமார், ராதா ரவி, சிம்பு ,ஷாம் ,போண்டா மணி ,கிங் காங்  நடிகைகள் ராதிகா, வடிவுக்கரசி , நிரோஷா , மும்தாஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் பூவிலங்கு மோகன், ப்ரிதிவி, நீலிமா ராணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்துக்கு பின்பு நடிகர் சரத் குமார் தலைமையிலான அணி பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. முதலாவதாக நடிகர் விஜய குமார் பேசினார். அதன் பின்பு நடிகர் சங்க துணை தலைவர் பதவிக்கு போட்டியிட தேர்வாகி இருக்கும் நடிகர் சிம்பு பேசினார்
நடிகர் சங்கம் எப்போதும் ஒன்று பட்டு இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை இப்படி இரண்டாக துண்டு பட்டு இருப்பதில் எனக்கு துளியும் விருப்பமில்லை. நான் சிறு வயதில் இருந்து இந்த நடிகர் சங்கத்தில் இருக்கிறேன். இங்கு இருக்கும் எல்லோரையும் பற்றி எனக்கு நன்றாக தெரியும். சிறு வயதில் இருந்து இன்று வரை அவர்களை பார்த்து தான் நான் வளந்திருக்கிறேன். இவர்கள் எல்லோரையும் எனக்கு நன்றாக தெரியும். இவர்கள் அனைவரும் நல் உள்ளம் கொண்டவர்கள். நான் எப்போதும் நல்லவர்கள் பக்கம் தான் இருப்பேன். தேர்தலில் வெற்றியோ தோல்வியோ நான் எப்போதும் நல்லவர்களோடு இருப்பேன் இதில் மாற்று கருத்து இல்லை.
நான் ஒரு தமிழன் எனக்கு தேர்தலில் போட்டியிட எல்ல உரிமையும் இருக்கிறது. எதிர் அணியினர் அங்கே கூறும் அளவுக்கு ஒரு பிரச்னையும் இங்கு இல்லை  என்பது தான் நிஜம். நான் யாருக்கும் பயந்து இந்த அணியில் சேர்ந்து போட்டியிடவில்லை. நான் எப்போதும் நல்லவர்களோடு இருப்பேன் என்று கூறினார்.
அடுத்ததாக பேசிய நடிகை ராதிகா சற்று காரசாரமாகவே பேசினார்  சரத்குமார் நிஜமாகவே நல்ல மனிதர். நடிகர் சங்கத்தில் யாருக்குகாவது ஏதாவது பிரச்னை என்றால் இரவு பகல்  பாராது அவர்களோடு இருந்து அந்த  பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டு தான் வருவார். இப்படிப்பட்ட ஒரு மனிதரை பார்த்து எதிர் அணியில் உள்ளவர்களுக்கு தவறாக பேச எப்படி மனசு வருகிறது என்று தெரியவில்லை. எங்களை பார்த்து “அவதூறு” என்ற வார்த்தையை அடிக்கடி அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். முதலில் அவர்கள் அப்படி கூறுவதை நிறுத்தி விட்டு எங்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். நான் இதை பற்றி நடிகர் நாசரிடம் பேசும் போது இதை அவர் மறுத்தார். ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் அந்த வார்த்தையை உபயோகித்ததற்கான சாட்சி என்னிடம் உள்ளது.இப்படி எல்லாம் தவறான வார்த்தைகளை உபயோகித்து வரும் அந்த நடிகருக்கு தமிழ் சரியாக தெரியாது என்று நினைகிறேன். எங்களை எதிர்ப்பதற்கான காரணத்தை விஷாலிடம் கேட்டேன் அவருக்கே அதற்க்கு பதில் தெரியவில்லை.  நான்  நடிகர் சிவ குமார் அண்ணாவிடம் பேசும் போது அவரே அந்த அணி ஜெயிக்காது அதை நீ பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று கூறினார். எப்போதும் பிறரின் நலத்துக்காக உழைக்கும் சரத் அணி தான் ஜெயிக்கும் என்று முடித்தார் ராதிகா.
வெகு நாட்களுக்கு பின்பு நடிகை மும்தாஜ் இந்த நிகழ்வுக்கு வருகை புரிந்து பேசினார் ; மும்பையில் இருந்து வந்த நடிகை மோனல் தற்கொலை செய்து இறந்த போது நமது நடிகர் சங்க நிர்வாகிகளான கேப்டன் ; சரத் சார் ஆகியோர் உடலை பத்திரமாக எடுத்து செல்ல பெரிதும் உதவினர். மும்பையிலிருந்து வந்த நடிகையான எனக்கு இவர்கள் எல்லாம் நமக்கு இருக்கிறாகள் என்ற நம்பிக்கையை
கொடுத்தது. கண்டிப்பாக நான் அனைவருக்கும் நல்லது நினைக்கும் சரத் சார் அணிக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறினார்.
இறுதியாக பேசிய நடிகர் சரத் குமார் ; எனக்கு முன்னாள் பேசிய நடிகர் ராதா ரவி நுண்ணறிவு மிக்க மனிதர். நடிகர் சங்கத்துக்காக அவர் ஆற்றிய பணிகள் அபரிதமானது. இளம் நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகத்துக்கு வருவது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால் அவர்கள் என் மீது தேவை இல்லாமல் சுமத்தும் பழி அபாண்டமானது. உத்தம வில்லன் படத்தின் வெளியீடுக்கு பிரச்னை வந்த போது நான் இறுதி வரை உடன் இருந்தேன். அது என்னுடைய கடமையும் கூட. நமது சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் உலக நாயகனுக்கு என்னால் முடிந்த உதவியை செய்தேன். ஏன் நான் கார்த்தியின் கொம்பன் ; விஷாலின் பாயும் புலி படத்துக்கு பிரச்சனை வந்த போது கூட அவர்களுக்கு ஆதரவாக இருந்தேன். ஆனால் அவர்கள் அனைவரும் என்னை தவறாக பேசி வருகின்றனர். இப்படியே அவர்கள் தொடர்ந்தால் அவர்களை பற்றிய ரகசிய பெட்டியை நான் திறப்பேன். இதற்க்கு மேலும் நான் பொறுமையாக மாட்டேன் நான் வாய் திறந்து பேச போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை சரத் குமார் என்று முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*