அடையாள அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி – ரஜினிகாந்த் அவர்கள் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள்

அடையாள அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி மற்றவர்கள் வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். – அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் வேண்டுகோள்.

அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட காலத்துக்கு பிறகு தனது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு, கடந்த மாதம் ஏப்ரல் 12- ஆம் தேதி நடக்கவிருந்தது. ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் 8 பேர் கொண்ட குழுவாக புகைப்படம் எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ரசிகர்கள் அனைவரும் தலைவருடன் தனித்தனியே புகைப்படம் எடுக்க விரும்பியதால் அவர்களின் விருப்பத்திற்கேற்ப வேறொரு நாளில் சந்திப்பு நடைபெறும் என்று பாசத்தலைவர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

அதன் படி, ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி இம்மாதம் (மே) 15ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொருட்டு அதற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ரஜினிகாந்த அவர்கள் தன் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுடைய ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

மதிப்பிற்குரிய ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் தான் அனுமதி. அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அன்புடன் ஒத்துழைக்கவும்.

Image may contain: text

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*